Tamil Swiss News

பாசெல் விமான நிலையம் - இரவு நேர விமான சேவைகளை பாதியாக குறைக்க திட்டம்

பாசெல் விமான நிலையம் - இரவு நேர விமான சேவைகளை பாதியாக குறைக்க திட்டம்

அடிக்கடி விமானத்தில் பறப்பவர்களுக்கு, ஒரு விமான நிலையத்திற்கு அருகில் வாழ்வது வசதியானது, ஆனால் அது இரைச்சல் மிகுந்ததும் கூட.

விமான இரைச்சலை குறைக்க பாசெல்-மல்ஹவுஸ் விமான நிலையம், இரவு 11 மணி முதல் நள்ளிரவு வரையிலும், விமான புறப்பாடுகளை ரத்து செய்ய முடிவு செய்திருக்கிறது.

பாசெல்-மல்ஹவுஸ், சுவிட்சர்லாந்தின் மூன்றாவது பெரிய விமான நிலையம் ஆகும். பிரஞ்சுப் பிரதேசத்தில் இருந்தாலுல் சுவிட்சர்லாந்தால் இயக்கப்படும் ஒரு விமான நிலையம் இது.

விமான நிலையத்தின் வரலாறு, 1940 கள் காலகட்டத்தினுடையது. விரிவாக்கத்திற்கு குறைந்த இடத்தை மட்டுமே கொண்டிருந்த இந்த இடத்தில், பிரெஞ்சு பிரதேசத்தினுள் ஒரு சர்வதேச விமான நிலையத்தை உருவாக்க பாதியளவு பாசெல் நகர மக்கள் ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து 1949 ஆம் ஆண்டில், பிரான்ஸ், விமான நிலையத்திற்கு தேவையான நிலத்தை உருவாக்கிக் கொடுத்தது.

இந்த இரைச்சல் குறைப்புத் திட்டம் உள்ளூர் நகராட்சிகள் மற்றும் விமான நிலையத்திற்கு இடையே பதட்டங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல், இரவு 11 மணிக்கு பின்னர் தென் பகுதி நோக்கி புறப்படும் விமானங்களின் எண்ணிக்கை இருமடங்காகியது.

புதிய திட்டத்தின் ஒரு பகுதி, மேம்பட்ட விமான நேரம் தவறாமை மீது உள்ளது. இரைச்சல் குறைவான விமானங்களை பயன்படுத்துவதற்கு விமான நிறுவனங்களை கட்டாயப்படுத்தும் வகையிலான நிதி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விமான நிலையம் யோசித்துக் கொண்டிருக்கிறது.

விமான நிலையத்தின் பொருளாதாரத்திற்கு ஆபத்து விளைவிக்காத வகையில் இந்த திட்டம் இருக்கும் என்று விமான நிலையம் தெரிவித்தது. இந்த விமான நிலையம் சுமார் 6,000 பேருக்கு வேலைகளை வழங்குகிறது, அதில் 70% பிரெஞ்சு மக்கள்.

2014 ஆம் ஆண்டில், பிரெஞ்சு அரசாங்கம் பிரெஞ்சு வரிகள் மற்றும் வேலைவாய்ப்பு விதிகளை சுமத்த தீர்மானித்தபோது, இந்த விமான நிலையம் சற்று ஆட்டம் கண்டது. இறுதியில், 2016 நவம்பரில், பிரெஞ்சு மற்றும் சுவிஸ் அரசாங்கங்கள் ஒரு உடன்பாட்டை ஒப்புக்கொண்டன. அந்த ஒப்பந்தத்தின் கீழ், விமான நிலையத்தின் சுவிஸ் பகுதியில் சுவிஸ் வாட் வரி விதிக்கப்பட்டது, மற்றும் இந்த பகுதியில் நடைபெறும் வணிகங்களுக்கு பிரஞ்சு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுவருகிறது. விமான நிலையத்தில் விதிக்கப்பட்டுள்ள வரிகள் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்திற்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

(Image: lenews.ch)