பொருளாதார அமைச்சர் கூட்டாட்சி கவுன்சிலில் இருந்து விலக முடிவு..!

சுவிஸ் பொருளாதார அமைச்சர் Johann Schneider-Ammann ஏழு உறுப்பினர்களைக் கொண்ட அரசாங்கத்தில் நீடிக்க மாட்டார், அடுத்த ஆண்டு இறுதிக்குள் பதவி விலக அவர் திட்டமிட்டுள்ளார்.
வெள்ளியன்று Neue Zürcher Zeitung பத்திரிகைக்கு அவர், 2019 ஆன்டு இறுதிக்குள் தனது பதவிக்காலத்தை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக கூறினார், இது அவர் தற்போது வகித்துவரும் பதவியின் இறுதிக் காலமாகும்.
1999 ஆம் ஆண்டில் மைய வலதுசாரி ராடிக்கல் கட்சி சார்பில் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்படும் முன், 66 வயதான Schneider-Ammann, தன் தொழில் வாழ்க்கையை ஒரு பொறியாளராகவும் தொழிலதிபராகவும் ஆரம்பித்தார். அவர் 2010 இல் கூட்டாட்சி கவுன்சிலில் தனது இடத்தைப் பிடித்தார், 2016 ல் சுவிட்சர்லாந்து ஜனாதிபதியாக (அதிக முக்கியத்துவம் இல்லாத ஒரு சம்பிரதாய பதவி) ஒரு வருடம் இருந்தார்.
Schneider-Ammann இன் பதவிக்காலத்தில் சுவிட்சர்லாந்தில் முக்கிய அரசியல் பிரச்சனைகளாக முழு வேலைவாய்ப்பை உறுதிசெய்வது மற்றும் தொழில்துறையை பராமரிப்பது ஆகியவை இருந்தன.
அவரை மிகவும் பெருமைப்பட வைத்த சாதனைகளில் ஒன்று, சீனாவுடனான ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஆகும். இது 2014 ல் நடைமுறைக்கு வந்தது. நாட்டின் செல்வாக்கு மிகுந்த பிரச்சினைகள், குறிப்பாக நாட்டின் முக்கிய விவசாயிகள் அமைப்புடன் இணைந்து நடத்திய விவசாய சீர்திருத்தங்கள் ஆகியவற்றிற்கும் அவர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது.
கடந்த ஜூலை மாதம் போக்குவரத்து அமைச்சர் Doris Leuthard பதவி விலகியதை தொடர்ந்து இவர் தனது முடிவை எடுத்துள்ளார்.
(Image: www.swissinfo.ch)