Tamil Swiss News

வட கொரியா மீதான பொருளாதார தடைகளை மீண்டும் இறுக்குகிறது சுவிட்சர்லாந்து..!

வட கொரியா மீதான பொருளாதார தடைகளை மீண்டும்  இறுக்குகிறது சுவிட்சர்லாந்து..!

பியோங்யாங் மீண்டும் ஒரு புதிய ஏவுகணை சோதனையை நடத்தியபின் கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த ஐ.நா. தீர்மானத்திற்கு இணங்க, வட கொரியாவிற்கு எதிரான பொருளாதார தடைகளை மீண்டும் இறுக்கமாக்குகிறது சுவிட்சர்லாந்து.

சுவிஸ் கூட்டமைப்பு புதன்கிழமையன்று கப்பல் துறையில் வர்த்தகம், பணி அனுமதி மற்றும் சேவைகள் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட உடனடி நடவடிக்கைகளை அனுமதித்தது.

வட கொரியர்களுக்கு பணி அனுமதி மீதான முந்தைய தடை, சுவிஸ்ஸில் வருமானம் ஈட்டும் வட கொரியர்களுக்கு குடியுரிமை அனுமதிகளை ரத்து செய்வதன் மூலம் முடுக்கிவிடப்பட்டது. 'தேசிய அல்லது சர்வதேச சட்ட விதிமுறைகளால் திரும்பப் பெற முடியாத அனுமதிகளுக்கு மட்டுமே விலக்கு' என்று பொருளாதார அமைச்சகத்தின் பத்திரிகை வெளியீடு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள வர்த்தக கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன. கப்பல் துறையில், சில சேவைகளை வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், பெடரல் கவுன்சில் ஸ்விஸ் பதிப்பகத்திலிருந்து அத்தகைய நடவடிக்கைகளுக்கு உதவிய கப்பல்களை அகற்றவும் முடியும்.

அதன் அணுசக்தித் திட்டம் மற்றும் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடியாக வட கொரியா மீது ஏற்கனவே சர்வதேச தடைகள் பரவியுள்ளன.

கடந்த வாரம் பியோங்யாங் அணுஆயுத சோதனைகளுக்கு முடிவுகட்டுவதாகவும், வட கொரிய தலைவர் கிம் ஜொங்-அன் தனது தென்கொரிய தலைவர்களுடன் வெளிப்படையான சூழ்நிலையில் மூன்றாவது உச்சிமாநாட்டை நடத்த இருப்பதாகவும் செய்திகள் வந்த நிலையில் சுவிட்சர்லாந்து புதன்கிழமை இந்த முடிவை அறிவித்தது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கிம் ஜோங்-உன் உடன் ஒரு வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டை நடத்த இருப்பதாக எதிர்பார்க்கப்படுகையில், பியோங்யாங் தனது அணுசக்தி ஆயுதங்களை அகற்ற துவங்கும் முன் வடகொரியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை தான் ரத்து செய்ய மாட்டேன் என கடந்த ஞாயிறன்று அவர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

(Image: www.swissinfo.ch)