Tamil Swiss News

லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் உள்ள சுவிஸ் துணை தூதரகங்கள் மூடல்..!

லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் உள்ள சுவிஸ் துணை தூதரகங்கள் மூடல்..!

அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானில் உள்ள சுவிஸ் துணை தூதரகங்கள் இந்த ஆண்டின் இறுதியில் மூடப்படும் எனத் தெரிகிறது.

வெளியுறவு அமைசகத்தின் பரிந்துரையின் பேரில், புதனன்று அரசாங்கம் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் உள்ள அதன் துணை தூதரகங்களை மூட முடிவு செய்தது.

இந்த இரண்டு துணை தூதரகங்களும் நீண்டகாலமாக எந்தவித தூதரக சேவைகளையும் வழங்கவில்லை, இனியும் வழங்காது. சுவிஸ் வணிக நலன்கள், வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்த இந்த தூதரகங்களுக்கு குறைந்த வாய்ப்புகள் மட்டுமே இருந்தன.

அமெரிக்க மேற்குக் கடற்கரையில் இத்தகைய நடவடிக்கைகள், சுவிஸ் சுற்றுலா, சுவிஸ் பிசினஸ் ஹப் மற்றும் சுவிஸ்னெக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள துணை தூதரகத்தால் நடத்தப்படுகின்றன.

சுவிட்சர்லாந்தின் பொருளாதார நலன்களை அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தின் வெளியுறவு விவகாரக் குழுக்கள் சிகாகோ துணை தூதரகத்தை மீண்டும் திறக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட நெட்வொர்க்

சுவிட்சர்லாந்தின் வெளிநாட்டு நெட்வொர்க் தற்போது 170 பிரதிநிதித்துவங்களை உள்ளடக்கியுள்ளது, இதில் 1990 க்குப் பின் திறக்கப்பட்ட 36 தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களும் அடங்கும்.

ஆனால் 30 க்கும் மேற்பட்ட தூதரகங்கள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில், கடந்த 20 ஆண்டுகளில் மூடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் பற்றி எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து, அரசாங்கம் துணை தூதரகங்களை மேலும் குறைக்க முன்வந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சுவிஸ் வெளிநாட்டுச் சமூகம், சுவிட்சர்லாந்தின் தூதரக நெட்வொர்க்கில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த தூதரக குறைப்பை கண்டு அதிருப்தியில் உள்ளது.

(Image: www.swissinfo.ch)