சுவிட்சர்லாந்தில் ஜெர்மன் ஜனாதிபதி..!

ஜேர்மன் ஜனாதிபதி Frank-Walter Steinmeier, இரண்டு நாள் அரசு பயணமாக புதனன்று சுவிட்சர்லாந்து வந்தடைந்தார். இந்த பயணத்தில் பெர்ன் இராணுவ கௌரவங்களும், இருதரப்பு உறவுகளையும், ஐரோப்பாவையும் பற்றிய பேச்சுவாத்தைகளும் அடங்கும். ஜெர்மனி சுவிட்சர்லாந்து நாட்டின் மிக முக்கியமான வர்த்தக பங்காளியாக உள்ளது.
2010 ஆம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக ஜெர்மன் ஜனாதிபதி சுவிட்சர்லாந்துக்கு வருகை தந்துள்ளார். இந்த இரண்டு நாட்களில், Steinmeier, பெடரல் கவுன்சில் (நிறைவேற்றுக் குழு) உடன் "இருதரப்பு உறவுகள், சர்வதேச சூழ்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு, மற்றும் ஐரோப்பிய கொள்கை", ஆகியவற்றை மையப்படுத்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் என ஒரு சுவிஸ் அரசாங்க அறிக்கை தெரிவிக்கிறது.
தனது பயணத்திற்கு முன்னதாக, ஜெர்மன் ஜனாதிபதி இந்த சிறிய ஆல்பைன் நாட்டை புகழ்ந்தவாறு இருந்தார். அவர் அடிக்கடி ஆல்ப்ஸ் பகுதிக்கு வருகை தருவதை வழக்கமாக கொன்டிருந்தார்.
செவ்வாயன்று அவர் சுவிஸ் பொது வானொலி SRF இடம் கூறுகையில்: "நான் சுவிட்சர்லாந்தை பார்க்கும்போது, அதனை வணிக மற்றும் அறிவியலுக்கான உலக நாடுகளின் ஒரு தலைமையாக பார்க்கிறேன்... ஜெர்மனி ஒரு நட்பு நாடு. நாங்கள் நல்ல அயலார்கள் மட்டுமல்ல. நாம் பொதுவான ஆர்வங்களைக் கொண்டுள்ளோம், அதில் நாம் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம்," என்றார்.
பிப்ரவரி 2017 ல் ஜெர்மன் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற Steinmeier, ஐரோப்பிய ஒன்றியத்தை சுவிட்சர்லாந்து ஒரு எதிரியாக பார்க்கவில்லை என்று நம்புவதாக கூறினார். ஒரு கட்டமைப்பிலான ஒப்பந்தத்தின் மீதான ஐரோப்பிய ஒன்றிய-சுவிஸ் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றத்திற்கான நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்தார்.
"அத்தகைய கட்டமைப்பில் உடன்படிக்கை ஏற்பட்டால், அது இரு அணிகளுக்குமான வெற்றிகரமான சூழ்நிலையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன், அதனால்தான் அதில் நான் முன்னேற்றத்தை பார்க்க விரும்புகிறேன்," என்று 62 வயதான மத்திய-இடது சமூக ஜனநாயகக் கட்சி உறுப்பினர் Steinmeier கூறினார்.
வியாழனன்று ஜெர்மனிக்கு திரும்புவதற்கு முன்னர், காலநிலை மாற்றத்தின் பாதிப்பு பற்றி மேலும் அறிய, வாலேஸ் மாகாணத்தின் Aletsch Glacier மீது ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
(Image: www.swissinfo.ch)