Tamil Swiss News

பருமனாக உள்ள சுவிஸ் குழந்தைகளின் எண்ணிக்கை சரிவு..!

பருமனாக உள்ள சுவிஸ் குழந்தைகளின் எண்ணிக்கை சரிவு..!

அதிக எடை அல்லது உடல் பருமனான சுவிஸ் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து வருவதை ஒரு தேசிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் அதிக எடை மற்றும் பருமனான குழந்தைகள் சதவீதம் 2005/6 மற்றும் 2016/17 பள்ளி ஆண்டுகளுக்கு இடையே 19.9% இலிருந்து 16.7% வரை சரிந்துள்ளது என Promotion Health Switzerland செவ்வாய்க்கிழமை அறிக்கையளித்துள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள், பாஸெல், பெர்ன் மற்றும் ஜூரிச் ஆகிய நகரங்களில் இருக்கும் நர்சரி, பிரைமரி மற்றும் செக்கண்டரி பள்ளி குழந்தைகள் 14,000 பேரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட உடல் நிறை குறியீட்டெண் (BMI) கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்டவை.

"கடந்த சில ஆண்டுகளில் காணப்பட்ட சாதகமான போக்கு தொடர்வது திருப்திகரமானது" என்று Promotion Health Switzerland இன் இயக்குநர் தாமஸ் மேட்டிக் பத்திரிகை அறிக்கையில் தெரிவித்திருந்தார். அவர், பருமன் தடுப்பு முயற்சிகளை (குறிப்பாக நர்சரி பள்ளிகளில்) வரவேற்றார்.

நர்சரி பள்ளி வயது மாணவர்களுக்கு உள்ள உடல் பருமன் ஒரு தொடர்ச்சியான சரிவை கண்டிருப்பதும், மற்றும் பிரைமரி பள்ளி வயதில் கீழ்நோக்கிய போக்கு தொடங்குவதையும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. செக்கண்டரி பள்ளி குழந்தைகளுக்கான புள்ளிவிவரங்கள் நிலையாக இருந்தது.

16.7% குழந்தைகள் அதிக எடையுடன் இருந்தனர், அவர்களில் 4.3% பருமனாக இருந்தனர் (2005/6 இல் 4.9% ஆக இருந்தது). 2010/2011 இல் அதிக எடையுள்ள அல்லது பருமன் கொண்டிருந்த குழந்தைகள் 20.1% இருந்ததாக நிறுவனம் பதிவு செய்தது.

ஒரு மனிதன் பருமனாக உள்ளானா அல்லது ஆரோக்கியத்துடன் உள்ளானா என்பதை BMI எனப்படும் உடல் நிறை குறியீட்டெண் மூலம் கண்டறியலாம். வயதுவந்த பெரியவர் ஒருவருக்கு 18 கிலோ / மீ2 மற்றும் 25 கிலோ / மீ2 இடையே BMI இருந்தால் அவர் நார்மலாக இருப்பதாக கருதப்படும், அதே நேரத்தில் BMI 25 கிலோ/ மீ2 க்கு அதிகமாக இருந்தால் அவர் அதிக எடை கொண்டவராக கருதப்படும். 30 கிலோ / மீ 2 அல்லது அதற்கு மேல் BMI உள்ளவர்கள் பருமனான நபராக கருதப்படுவார். குழந்தைகளுக்கும் அதே கணக்கீடு பயன்படுத்தப்படுகிறது ஆனால் வயதுக்கு ஏற்றபடியான ஸ்லைடிங் ஸ்கேல் பயன்படுத்தி கணிக்கப்படுகிறது.

(Image: www.swissinfo.ch)