சட்டவிரோதமாக குடியேரியவர்களை பிரான்ஸிற்கு அனுப்ப உதவிய விவகாரம் - இரண்டு சுவிஸ்வாசிகளுக்கு போலீஸ் காவல்

பிரஞ்சு ஆல்ப்ஸ் பகுதியில் இரண்டு சுவிஸ் நாட்டினர் மற்றும் நான்கு இத்தாலியர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஞாயிறன்று, சட்டவிரோதமாக குடியேறிய 30 பேரை இத்தாலியில் இருந்து பிரான்ஸுக்குள் நுழைய இவர்கள் உதவியதாக கூறப்படுகிறது.
இந்த காரணத்திற்காக கைது செய்யப்பட்ட இரு சுவிஸ்வாசிகளும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த திங்கட்கிழமையன்று பிரஞ்சு நகரமான Gap இன் வக்கீல் அலுவலகம் கூறியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 100 க்கும் அதிகமான பிரஞ்சு மற்றும் இத்தாலிய ஆர்வலர்களோடு சேர்ந்து, இத்தாலிய எல்லையில் உள்ள Montgenèvre கணவாய் பகுதியை சட்டவிரோதமாக குடியேரியவர்களுடன் கடந்து சென்றனர். அவர்கள் Montgenèvre ஸ்கீ ரிசார்ட் வந்தடைந்து, போலீசாரை சந்தித்து, பின்னர் Briançon நகரத்திற்கு சென்றடைந்தனர். அங்கு தன்னார்வ தொண்டர்களால் நடத்தப்படும் குடியேறியவர்களுக்கான வரவேற்பு மையம் அமைந்துள்ளது.
ஆல்ப்ஸ் பகுதியை கடந்து செல்லும் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை எதிர்த்து அருகில் உள்ள Echelle கணவாயை பான்-ஐரோப்பிய இயக்கத் தலைமையின் தீவிர வலதுசாரி ஆர்வலர்கள் தடுத்து வைத்ததால் (ஐரோப்பவை சுற்றிலும் இத்தகைய பாதைகள் மூடியுள்ளன) இந்த சம்பவம் நிகழ்ந்தது.
பலவீனமான எல்லை
அரசாங்கம் சர்ச்சைக்குரிய ஒரு புதிய குடியேற்ற சட்டத்தை நிறைவேற்றுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், உள்துறை அமைச்சர் Gerard Collomb,"தீவிர இடது மற்றும் வலதுசாரி" குழுக்கள் தான் மலை மீது நிகழ்ந்த இந்த 'ஏற்றுக்கொள்ள முடியாத செயலுக்கு' பொறுப்பு எனத் தெரிவித்தார்.
இந்த பிராந்தியத்தில் எல்லைக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
2017 ஜூலை முதல் பிப்ரவரி 2018 வரையான காலகட்டத்தில் கிட்டத்தட்ட 3,000 புலம்பெயர்ந்தோர் பிரான்சில் உள்ள ஆல்ப்ஸில் உள்ள தங்குமிடங்கள் வழியாக சென்றனர். இதில் 1,185 கினியர்களையும் (793 பேர் தங்களை சிறுவர்கள் என அறிவித்தனர்) மற்றும் 481 ஐவரியர்கள் (209 பேர் தங்களை சிறுவர்கள் என அறிவித்தனர்) ஆகியோரும் அடங்குவர்.
(Image: www.swissinfo.ch)