திரும்பிவந்த ஜிஹாதிஸ்ட்களை மேற்பார்வையிட நிபுணர் குழு..!

சிரியா போன்ற போர் மண்டலங்களில் இருந்து திரும்பிய சந்தேகத்திற்குட்பட்ட ஜிஹாதிஸ்ட் போராளிகளை உள்ளூர் அதிகாரிகள் சமாளிக்க உதவ ஒரு நிபுணர் குழுவை சுவிட்சர்லாந்து உருவாக்க திட்டமிட்டுள்ளது.
டிசம்பர் 2017 ல் சுவிஸ் அதிகாரிகள், தீவிரவாதம் மற்றும் வன்முறையை தடுக்க தேசியத் திட்டத்தின் ஒரு பகுதியாக 20 வெவ்வேறு வழிகளில் திட்டங்களை தீட்டினர் என NZZ am Sonntag செய்தித்தாள் ஞாயிறு அன்று தெரிவித்துள்ளது.
2001 ல் இருந்து, சுவிட்சர்லாந்தில் இருந்து கிட்டத்தட்ட 100 பேர் ஜிஹாதி பயணிகளாக சிரியா, ஈராக், சோமாலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உள்ள மோதல் மண்டலங்களுக்கு சென்றுள்ளனர். சுவிஸ் போராளிகள் 29 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 16 பேர் சுவிட்சர்லாந்துக்கு திரும்பி வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஃபெடரல் தேசிய பாதுகாப்பு நெட்வொர்கின் பிரதிநிதி André Duvillard, வரவிருக்கும் வாரங்களில் இந்த புதிய நிபுணர் குழுவை உருவாக்க மத்திய கவுன்சில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என NZZ AM Sonntag இடம் அவர் கூறினார். திரும்பி வரும் ஜிகாதிஸ்ட் போராளிகளுக்கு சட்டரீதியான பிரச்சினைகள் மற்றும் போராளிகளை சமுதாயத்தில் மீண்டும் இணைதல் ஆகிய இரண்டு விஷயங்களை சமாளிக்கத் தகுதியற்ற பல்வேறு மாகாண அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க இது முக்கியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, நாட்டின் உளவுத்துறை சேவை (FIS), சுவிட்சர்லாந்தில் ஜிகாதிஸ்ட்கள் மற்றும் பிற தீவிரவாதிகள் உள்ளிட்ட சுமார் 100 பேர் தேசிய பாதுகாப்பிற்கு அதிக ஆபத்துடையவர்கள் என அடையாளம் கண்டுள்ளது. FIS நிறுவனம் "ஜிகாத் கண்காணிப்பு திட்டத்தின்" ஒரு பகுதியாக 550 பேரை ஆபத்தானவர்கள் என்று கருதுகிறது.
நீதித்துறை அதிகாரிகளின்படி, தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அல்லது பிற குற்றவியல் அமைப்புகளுக்கு ஆதரவாக 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு, பயங்கரவாதம் தொடர்பாக 17 புதிய வழக்குகள் பதியப்பட்டது குறிப்பிட்த்தக்கது.
(Image: www.swissinfo.ch)