வெளிநாட்டு தூதரங்களால் மில்லியன் கணக்கில் செலுத்தப்படாத சுவிஸ் போக்குவரத்து அபராத தொகை..!

பெர்ன் மற்றும் ஜெனீவா போன்ற சுவிஸ் நகரங்களில் வசிக்கும் வெளிநாட்டு தூதர்கள், ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கில் பார்க்கிங் மற்றும் மற்ற போக்குவரத்து தொடர்பான அபராதங்களை செலுத்தாமல் விட்டிருப்பது தெரியவந்துள்ளது.
2014 மற்றும் 2017 க்கு இடையில், 90 தூதரகங்கள் அமைந்திருக்கும் பெர்ன் மாகாணத்தில் உள்ள வெளிநாட்டு தூதர்களுக்கு CHF745,000 (764,000 டாலர்கள்) தொகையிலான போக்குவரத்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக SonntagsZeitung செய்தித்தாள் கடந்த ஞாயிறன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும் அதில் CHF141,300 மட்டுமே செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஐரோப்பிய தலைமையகம் அமைந்திருக்கும், மற்றும் 33 தூதரக பணிகளுக்கான மையப் புள்ளியாகவும் இருக்கும் ஜெனீவா மாகாணத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதே காலகட்டத்தில், போக்குவரத்து அபராதம் CHF4 மில்லியனை தாண்டியது. ஆனால் அதிகாரிகளால் சுமார் CHF629,000 மட்டுமே சேகரிக்க முடிந்தது, இதனால் CHF3.4 மில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டது.
தூதரக கார்களின் ஓட்டுநர்கள் தூதரக உறவுகளுக்கான 1961 வியன்னா மாநாட்டின் விதிகளின் கீழ் தூதரக தடுப்புகளில் இருந்து பயனடைகின்றனர். அபராதம் செலுத்தப்படாவினில், போக்குவரத்து மீறல் அறிவிப்புகள் வழக்கமாக போலீஸ் நிலையத்திலிருந்து சுவிஸ் வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பப்படும், பின்னர் அது தூதரகங்களுக்கு அனுப்பப்படும்.
இந்த கட்டணப் பிரச்சனை சமீபத்திய ஆண்டுகளில் சற்றே அதிகரித்துள்ளதாக தோன்றுகிறது. 2010 ல், பெர்ன் மாகாணத்தில் தூதரக போக்குவரத்து அபராத தொகையில் 10% மட்டுமே செலுத்தப்பட்டது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 25 சதவிகிதம் ஆகும்.
"சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு தூதரக பணியாளர்களின் நிதி நடத்தை குறித்து சுவிஸ் வெளிநாட்டு அமைச்சகம் கருத்து தெரிவிக்கவில்லை," என சுவிஸ் அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை Sonntagszeitung செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
(Image: www.swissinfo.ch)