Tamil Swiss News

சுவிஸ் அணுசக்தி ஆலைகளை அகற்ற கூடுதலாக CHF1 பில்லியன் தேவை..!

சுவிஸ் அணுசக்தி ஆலைகளை அகற்ற கூடுதலாக CHF1 பில்லியன் தேவை..!

சுவிட்சர்லாந்தின் ஐந்து அணுசக்தி நிலையங்களை அகற்ற மற்றும் கதிரியக்க கழிவுகளை கையாள முன்னதாக மதிப்பிடப்பட்டதை விட CHF1.1 பில்லியன் ($ 1.15 பில்லியன்) கூடுதலாக செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. மொத்த தொகை இப்போது CHF 24.6 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என சுற்றுச்சூழல் அமைச்சகம் வியாழக்கிழமை கூறியது.

2011 ல், ஜப்பானில் நிகழ்ந்த புகுஷிமா பேரழிவைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தின் அணுசக்தித் திட்டத்தை முடக்க முடிவுசெய்தது சுவிஸ் அரசாங்கம். நாட்டின் மின்சார உற்பத்தியில் சராசரியாக 35 சதவீதத்தை அணுசக்தி நிலையங்கள் வழங்கிவந்தது குறிப்பிடத்தக்கது.

சேவையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய ஐந்து நிலையங்களும் எப்போது அகற்றப்படும் என்று துல்லியமான அட்டவணை அமைக்கப்படவில்லை என்றாலும், இந்த நடவடிக்கையின் செலவை அரசாங்கம் வரையறுத்துள்ளது. அவற்றிலுள்ள வசதிகளை அகற்ற சில CHF 3.8 பில்லியன் தொகையும், கதிரியக்க கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு மேலும் CHF 20.8 பில்லியன் தொகையும் தேவைப்படுகிறது.

முந்தைய மதிப்பீடுகள் CHF23.5 பில்லியன் செலவில் மொத்த செலவுகளையும் அடக்கியிருந்தன, ஆனால் இது மாகணங்களில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்ற ஆட்களை இணைப்பதற்காக சேமிக்கப்பட்டிருந்த தொகையை உள்ளடக்கியிருந்தது, மேலும் இழப்பீட்டு செலவுகள் குறைக்கப்படும் எனும் எதிர்பார்ப்பையும் கொண்டிருந்தது. இந்த சேமிப்புகள் திருத்திய வரவு-செலவுத் திட்டத்தில் இருந்து அகற்றப்பட்டுவிட்டன, ஏனெனில் இதை எப்படி நிறைவேற்றுவது என்பதில் எந்த உறுதியான திட்டங்களும் இல்லை.

அணுசக்தி ஆலை ஆபரேட்டர்களிடமிருந்து பங்களிப்புகளை உள்ளடக்கிய இரண்டு தனி நிதிகளிலிருந்து மொத்த தொகையும் ஈடுசெய்யப்படும். ஒன்று, கழிவு நீக்கம் செய்வதற்கான நிதி, மற்றொன்று வசதிகளை அகற்றுவதற்கான நிதி.

2017 ஆம் ஆண்டு மே மாதத்தில், புதிய அணுசக்தி ஆலைகளைத் தடைசெய்து எரிசக்தி நுகர்வை குறைப்பதன் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்குவிக்கும் நோக்கமுள்ள புதிய அணுசக்தி சட்டங்களை சுவிஸ் வாக்களர்கள் அங்கீகரித்தனர்.

(Image: www.swissinfo.ch)