Tamil Swiss News

பேல்லியேடிவ் கேருக்கு சுவிஸ் மக்களிடம் பெருகும் ஆதரவு!!

பேல்லியேடிவ் கேருக்கு சுவிஸ் மக்களிடம் பெருகும் ஆதரவு!!

பெரும்பாலான சுவிஸ் மக்கள் தீவிரமாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு மற்றும் இறக்கும் நிலையில் உள்ள மக்களுக்கு பேல்லியேடிவ் கேர் (palliative care) கிடைக்கச்செய்ய ஆதரவு கொடுக்கின்றனர், என பொது சுகாதார அமைப்பின் மத்திய அலுவலகம் (FOPH) ஒரு ஆய்வில் கண்டறிந்துள்ளது.

கடந்த ஆண்டு, ஆய்வில் பங்கேற்ற 80% க்கும் அதிகமானோர் தங்கள் வாழ்க்கையை முடிக்க விரும்பும் வழியைப் பற்றி யோசித்திருப்பதை சுட்டிக்காட்டியதாக கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆய்வு, சுவிஸ் மக்களிடையே பேல்லியேடிவ் கேர் பற்றிய மனப்பான்மை எப்படி உள்ளது என்பது பற்றி அறிய ஒரு வினாப்பட்டியல் உதவியுடன் நடத்தப்பட்டது.

பதிலளித்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேல் அவர்கள் தங்கள் வாழ்நாளின் முடிவில் அவர்கள் பெற விரும்பும் சிகிச்சையின் வகை மற்றும் பராமரிப்பு பற்றி ஏற்கனவே யோசித்து வைத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.

பதிலளித்தவர்களில் பாதிப்பேர் தாங்கள் ஆரோக்கியமாக இருக்கும் சமயத்திலேயே இந்த விடயத்தை பற்றி உரையாற்றுவது முக்கியம் என நம்புகின்றனர். சுமார் 8 சதவிகிதத்தினர் முன்பே சுகாதார ஆலோசகர்களிடம் தங்கள் சிகிச்சைத் திட்டங்களைப் பற்றி பேசியிருந்தனர்.

சுவிஸ் மக்களிடையே "palliative care" என்ற சொல் எவ்வாறு நன்கு அறியப்பட்டுள்ளது என்பதை இந்த ஆய்வு புலப்படுத்தியது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் சேகரிக்கப்பட்ட தரவுகளுடன் ஒப்பிடுகையில், இந்த palliative care பற்றி கேள்விப்பட்டிருந்த மக்கள் சதவீதம் தற்போது 48% முதல் 59% வரை உயர்ந்துள்ளது. 1,685 பேர் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதேபோன்ற ஆய்வு 2009 இல் FOPH ஆல் நடத்தப்பட்டது.

(Image: www.swissinfo.ch)