சுவிட்சர்லாந்தில் நீண்ட கால வறுமை அரிதாகவே உள்ளது - அறிக்கை கூறுகிறது

சுவிட்சர்லாந்தில் பெரும்பாலான சுவிஸ்வாசிகளுக்கு வறுமை என்பது ஒரு தற்காலிக அனுபவம், மக்கள் தொகையில் 1% மட்டுமே "நிரந்த ஏழையாக" கருதப்படுகின்றனர், என்கிறது சுவிஸ் மத்திய புள்ளியியல் அலுவலகம் (FSO).
நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்ட FSO கணக்கெடுப்பு, சுவிட்சர்லாந்தில் மக்கள் எத்தனை பேர் வறுமையால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை முதல் தடவையாக பகுப்பாய்வு செய்தது.
2016 இல் சுமார் 615,000 சுவிஸ் மக்கள் அல்லது மக்கள் தொகையில் 7.5% பேர் வருமான வறுமையால் பாதிக்கப்பட்டு இருந்ததாக அறிக்கை கூறுகிறது. இது முந்தைய ஆண்டில் 7% ஆக இருந்தது.
சமூகத்தில் ஒருங்கிணைந்த வாழ்க்கை நடத்துவதற்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை பெற நிதி இல்லை என்றால் அவர் ஒரு ஏழையாக வரையறுக்கப்படுவார் என்று அறிக்கை கூறுகிறது.
2013-2016 காலப்பகுதியில், எட்டு பேரில் ஒருவர் (12.3%) ஏழைகளாகக் கருதப்பட்டதாக ஆய்வு தெரிவிக்கிறது. இருப்பினும், மக்கள் தொகையில் 0.9% மட்டுமே இந்த நான்கு வருட காலத்திற்குள் வறுமையை அனுபவித்தனர்.
இந்த அறிக்கையின் படி, 1.2% பேர் மூன்று வருடங்களுக்கும் மற்றும் 2.5% பேர் இரண்டு வருடங்களுக்கும் வறுமையில் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒரு குறிப்பிட்ட வருடத்தை பார்க்கும்போது, மக்கள் தொகையில் 7.7% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் - 2016 ஆண்டு அறிக்கையில் கொடுக்கப்பட்டிருந்த அதே அளவு.
அறிக்கையில் பயன்படுத்தப்படும் எண்சார்ந்த வறுமைக்கான வரையறை, சமூக உதவி (SKOS) குறித்த சுவிஸ் மாநாட்டின் வழிமுறைகளிலிருந்து பெறப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் வாழ்வாதார வருமானம் ஒரு நபருக்கு மாதம் CHF 2,247 ($ 2,355) ஆகவும் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் இரண்டு பெரியவர்களுக்கு மாதம் CHF 3,981 ($ 4,173) ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
(Image: www.swissinfo.ch)