Tamil Swiss News

விவசாயத்தின் எதிர்காலாத்திற்கு ஆபத்து! - கூறுகிறார் விவசாயிகள் சங்க தலைவர்

விவசாயத்தின் எதிர்காலாத்திற்கு ஆபத்து! - கூறுகிறார் விவசாயிகள் சங்க தலைவர்

சுவிட்சர்லாந்தின் முக்கிய விவசாயிகள் குழுவின் தலைவர், நடப்பு விகிதத்தில் விவசாய நடவடிக்கைகள் தொடர்ந்து மூடப்பட்டு வந்தால், சுவிஸ் விவசாயிகள் இனி தங்கள் அரசியலமைப்பு கட்டளைகளை நிறைவேற்ற முடியாது எனக் கூறினார்.

சுவிஸ் விவசாயிகள் சங்கத்தின் மார்கஸ் ரிட்டர் திங்களன்று ஜெர்மனிய மொழி நாளேடான Nordwestschweiz-க்கு அளித்த பேட்டியில், சுவிஸ் விவசாயிகள் தொடர்ந்து விவசாயத் தேவைகளை பூர்த்தி செய்ய விரும்பினால், அதற்கு 2030 ஆம் ஆண்டுவாக்கில் தேவைப்படும் விளைநிலங்களின் எண்ணிக்கை 43,000 ஆக இருக்கும்.

தற்பொழுது சுவிஸ் விளைநிலங்கள் சுமார் 52,000 உள்ளன, ஆனால் ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 1,000 விளைநிலங்கள் மூடப்படுகின்றன. சுவிஸ் விவசாயத்தில் இத்தகைய மாற்றம் நிலையானது அல்ல, அது குறைக்கப்பட வேண்டும், என ரிட்டர் கூறினார்.

சர்ச்சைக்குரிய வரிகள்

ஒரு கரிம விவசாயியாகவும், கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் ரிட்டர், பெடரல் கவுன்சிலின் விவசாய கொள்கைகள் மீதான அவரது அதிருப்தியை தெரிவித்தார். அவை சுவிஸ் விவசாயிகளின் வாழ்வாதாரங்களைப் பறிக்கும் என்று அவர் கூறினார்.

சுவிட்சர்லாந்தின் செயல் சார்ந்த அமைப்பு ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கையெழுத்திடுவதோடு, வெளிநாடுகளில் இருந்து விவசாய பொருட்களுக்கான பாதுகாப்பு இறக்குமதி வரிகளை 30% முதல் 50% வரை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் சுதந்திர வர்த்தக சந்தையானது சுவிட்சர்லாந்தின் பல்வேறு சந்தைகளுக்கு அதிகமான அணுகலை வழங்குவதாகவும், மேலும் விற்பனை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் அரசாங்கம் வாதிடுகிறது.

ஆனால் சுவிஸ் விவசாயம் பாதுகாப்பான வரிகள் இன்றி சரிந்துவிடும் என்றும், ஏனென்றால் நாட்டில் உணவு தயாரிக்க உற்பத்தி செலவுகள் மிக அதிகமாக இருக்கும் என்றும் ரிட்டர் கூறுகிறார்.

சுவிட்சர்லாந்தில் விவசாயத்துறையை பாதுகாப்பதற்கான அடிப்படை நிபந்தனைகளில் சுங்கப் பாதுகாப்பும் ஒன்று, இது அரசாங்கத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது, என ரிட்டர் வாதிட்டார்.

(Image: www.swissinfo.ch)