11% சுவிஸ் குடிமக்கள் நாட்டிற்கு வெளியே வாழ்கின்றனர்..!

இதன் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் சுமார் 12,000 சுவிஸ் குடிமக்கள் வேறு நாடுகளுக்கு சென்று வாழ்கின்றனர்.
இந்த வரிசையில் 196,000 சுவிஸ் குடிமக்களுடன் பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் பிற அண்டை நாடுகளான ஜேர்மனி 89,000 மற்றும் இத்தாலி 50,000 உள்ளன.
இந்த எண்ணிக்கையில் எல்லை தொழிலாளர்களும் உள்ளடக்கம்.
அடுத்து கனடா 40,000, இங்கிலாந்து 34,000, ஆஸ்திரேலியா 25,000 மற்றும் ஸ்பெயினில் 23,000 சுவிஸ் நாட்டுக்காரர்கள் வாழ்கின்றனர்.
வெளிநாட்டு வாழ் சுவிஸ் குடிமக்களை ஒரு மாகாணமாக யூகித்தால், அது ஜூரிச், பெர்ன் மற்றும் வூட் ஆகியவற்றிற்கு அடுத்து நான்காவது மிகப்பெரிய மாகாணமாக இருக்கும்.
நிறைய வெளிநாட்டு வாழ் சுவிஸ்வாசிகள் இளையவர்களாக இருக்கிறார்கள், மற்றும் அவர்களில் 54% பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
(Image: www.worldradio.ch)