உரிம கட்டண வாக்கு பிரச்சாரத்தில் தானியங்கி ட்வீட்கள்..!

சுவிட்சர்லாந்தில் பொது ஒளிபரப்பு உரிம கட்டணத்தை அகற்றுவதை இலக்காகக் கொண்ட "No Billag" முன்முயற்சி பிரச்சாரத்தின் போது, ஒரு நாளுக்கு 1,000 ட்வீட்கள் என்ற முறையில் தானியங்கி பாட்கள் ட்வீட் செய்துள்ளன, எனக் கூறப்படுகிறது.
மார்ச் 4 அன்று, ஏறக்குறைய 72% வாக்காளர்கள் சுவிஸ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷனின் (SBC) சேவைகளுக்கான கட்டாய உரிம கட்டணத்தை அகற்றுவதற்கான ஒரு திட்டத்தை நிராகரித்திருந்தனர். இந்த No Billag முன்முயற்சி இரண்டு முக்கிய கட்சிகளின் இளைஞர் அணிகளால் தொடங்கப்பட்டவை ஆகும்.
இந்த விவகாரம் தொடர்பான கலந்துரையாடல்கள் உணர்ச்சிப்பூர்வ பிரச்சாரங்களைத் தூண்டியதுடன் வாக்கெடுப்பு பற்றிய பரந்த அளவிலான பேச்சுக்கள் சமூக ஊடகங்களிலும் தொடரச் செய்தன.
அப்ளைடு சயின்சஸ் அண்டு ஆர்ட்ஸ் வடமேற்கு சுவிட்சர்லாந்து (FHNW) பல்கலைக்கழகத்தின் படி, 50 பயனர்கள் No Billag பிரச்சாரத்திற்கு (ஆதரவாகவும் எதிராகவும்) பாதியளவு செய்திகளை உருவாக்கியிருந்தனர்.
சில ட்வீட்களுக்கு அரை வினாடிக்குள் பதில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது என பல்கலைக்கழகம் கூறுகிறது. இது ஒருவர் தட்டச்சு செய்யும் நேரத்தை விட மிக விரைவானது. வாக்கெடுப்புக்கு முன் 200,000 செய்திகள் மற்றும் 26,000 கணக்குகளை இந்த பல்கலைக்கழகம் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
(Image: www.swissinfo.ch)