சுவிட்சர்லாந்தில் லிபிய அகதிகள்..!

லிபியாவின் தடுப்புக்காவல் முகாம்களில் இருந்து பாதிக்கப்பட்ட அகதிகளின் முதல் குழு சுவிட்சர்லாந்தில் கால்பதிக்க தயாராக இருக்கும் இத்தருணத்தில், லிபியாவின் புலம்பெயர் நெருக்கடிக்கான சர்வதேச விளைவுகளை நாம் பார்க்கலாம்.
கடந்த ஆண்டு இறுதியில், பிடித்துவைக்கப்பட்ட ஆப்பிரிக்கர்கள் லிபிய அடிமைச் சந்தையில் விற்கப்படுகின்றனர் எனும் CNN அறிக்கை உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இது லிபியாவிலிருந்து புலம்பெயருபவர்களை அங்கிருந்து வெளியேற்ற ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பை (IOM) தூண்டியது. "ஏனென்றால் ஐரோப்பிய ஒன்றியமும் ஆப்பிரிக்க ஒன்றியமும் லிபியாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள 20,000 பேரை அப்படியே விட்டுவிட்டு வர முடியாது என தீர்மானித்தன," என மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவிற்கான IOM ஊடக அதிகாரி புளோரன்ஸ் கிம் கூறுகிறார்.
டிசம்பர் மாதத்தில், லிபியாவின் தடுப்புக்காவல் முகாம்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை வெளியற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை உயர் ஆணையரின் (UNHCR) அவசரகால திட்டத்தின் ஒரு பகுதியாக 80 பாதிக்கப்பட்ட அகதிகளை எடுத்துக்கொள்ள ஒப்புக்கொண்டதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் அகதிகளின் முதல் குழு வருகையைப் பற்றி கேட்டபோது, லிபியாவிலிருந்து நைஜருக்கு செல்ல வெளியேற்றப்பட்ட பெரும்பாலும் பலவீனமான ஒற்றை பெண்கள் தான் அந்தக் குழுவில் உள்ளனர் என குடியேற்றத்திற்கான அரசு செயலகம் (SEM) தெரிவித்தது.
நைஜரில் தற்போது தற்காலிக மையங்களில் இருக்கும் அகதிகளில் பலரையே சுவிட்சர்லாந்து ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு SEM இலிருந்து ஒரு குழுவினர் ஏற்கனவே அதன் சொந்த screening ஐ நடத்த சென்றுள்ளது. மேலும் UNHCR அகதிகளை எடுத்துக்கொள்ள மேலும் பல நாடுகளை எதிபார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.
(Image: www.swissinfo.ch)