சுவிஸ் பிளாக்செயின் தளம் ரோஹிங்கியாக்களுக்கு அடையாளம் கொடுக்கிறது..!

சுவிஸ் டிஜிட்டல் அடையாள தளமான Procivis ஒரு அரசு சார்பற்ற நிறுவனத்துடன் இணைந்து மியான்மரில் இருந்து இடம்பெயர்ந்த 3.5 மில்லியன் ரோஹிங்கியாக்களுக்கு அடையாளங்களை வழங்கவுள்ளது.
ரோஹிங்கியாக்களுக்கு அடிப்படை மனித உரிமைகளுக்கான அணுகல் மற்றும் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட அகதிகளை பிற நாடுகளில் ஒருங்கிணைக்க உதவும் நோக்கத்தை இந்த அமைப்பு கொண்டுள்ளது.
1982 ல் வெளிவந்த மியான்மர் (அப்போது பர்மா) அரசாங்க ஆணை ரோஹிங்கியாக்களின் நிலையை மோசமாக்கிவிட்டது. இந்த ஆணை சிறுபான்மை மக்களை குடியுரிமை அல்லது அதிகாரப்பூர்வ ஆவணங்கள் வைத்திருப்பதிலிருந்து விலக்கிவைத்தது, எனக் கூறுகிறது Rohingya Project NGO.
"ஒரு ரோஹிங்கியாவாக, நாடற்ற மக்களின் நிலை என்ன என்று எனக்கு தெரியும். எமது மக்களுக்கு, ஒரு பாதுகாப்பான டிஜிட்டல் அடையாளம் இருப்பது நல்லது மட்டுமல்ல - அது ஒரு அவசர தேவையும் கூட. 1982 ஆம் ஆண்டில் ரோஹிங்கியா மக்கள் நாடற்ற நிலையை அடைந்தபோது இத்தகைய ஒரு அடையாளம் இருந்திருந்தால் எங்கள் சமூகம் இன்று எதிர்கொண்டுவரும் பல போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய அவசியமே இல்லாமல் போயிருக்கும்"என்று ரோஹிங்கியா திட்டத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் முஹம்மத் நூர் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தார்.
ரோஹிங்கியா அகதிகள் அரசாங்க சேவைகளை அணுக மற்றும் சமூகத்துடன் ஒருங்கிணைந்து இருக்க அடிக்கடி சிரமப்படுகின்றனர், அதற்கு காரணம் அவர்களிடம் முறையான அடையாள விவரங்கள் இல்லாதது, என அறிக்கை தெரிவிக்கிறது.
பிளாக்செயின் Procivis e-ID தளம் ஒரு ஐந்தடுக்கு சரிபார்ப்பு செயல்முறையை உருவாக்கியுள்ளது, இது ரோஹிங்கியாக்களுக்கு ஒரு டிஜிட்டல் அடையாளத்தை உருவாக்க அனுமதிக்கும். "Procivis க்கு, ஒரு பாதுகாப்பன டிஜிட்டல் அடையாளத்திற்கான உலகளாவிய அணுகலை செயல்படுத்த வேண்டும் எனும் நிறுவனத்தின் பரந்த பார்வைக்கு ஆதரவாக அதன் முதல் இலாப நோக்கற்ற முயற்சியாக இந்த கூட்டுப்பங்காண்மை இருக்கும்" என்று Procivis நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Image: www.swissinfo.ch)