Tamil Swiss News

வெனிசுலா: சுவிஸ் விதித்துள்ள தடைகள் 'சட்டவிரோதமானவை'

வெனிசுலா: சுவிஸ் விதித்துள்ள தடைகள் 'சட்டவிரோதமானவை'

கடந்த வாரம் சுவிஸ் அரசாங்கம் வெனிசுலா நாட்டின் மீது சுமத்திய தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகளுக்கு வெனிசுலா அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

சுவிஸ் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெனிசுலாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் நடந்துகொண்டுள்ளது.

வெனிசுலாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோர்ஜ் அரேஸா எழுதிய ஒரு அதிகாரப்பூர்வ குறிப்பு, சுவிஸ் தூதரகத்திற்கு அனுப்பப்பட்டது.

சுவிட்சர்லாந்தை போன்ற "வரலாற்று சிறப்புமிக்க நடுநிலையான" நாட்டினால் சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் "பேச்சுவார்த்தைக்கான நிலைமைகளை" உருவாக்கிவிடாது, ஆனால் "வன்முறை விளைவுகளை ஈட்டுத்தரும் தீவிரவாத நிலைப்பாடுகளை வலுப்படுத்தும்" என்று அரேஸா எழுதியுள்ளார்.

எனினும், சுவிட்சர்லாந்துக்கு எதிராக எந்த பதிலடி நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சுவிஸ் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

சுவிஸ் கவலை

மார்ச் 28 அன்று, சுவிட்சர்லாந்து, ஏழு மூத்த வெனிசுலா அதிகாரிகள் சுவிட்சர்லாந்திற்குள் நுழைய அல்லது சுவிட்சர்லாந்தை கடந்து செல்ல தடை விதித்தது.

மனித உரிமை மீறல்கள் நடந்ததாக சொல்லப்படும் இந்த தென் அமெரிக்க நாட்டை கட்டுப்படுத்த முயலும் ஐரோப்பிய நாடுகளுடன் சுவிஸ் அரசாங்கமும் இணைந்திருக்கிறது.

சுவிஸ் அதிகாரிகளின் நடவடிக்கைகள், சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு "அடிபணிந்து" செல்வதை காட்டுகின்றன என்று அரேஸா கூறினார்.

திங்களன்று வெனிசுலாவின் உச்ச நீதிமன்றம், இந்த தடைகளை "கொடூரமானது" மற்றும் "சட்டவிரோதமானது" என்று கூறி உத்தரவிட்டது.

கடந்த வாரம், சுவிஸ் கூட்டாட்சி கவுன்சில், வெனிசுலாவில் தனிப்பட்ட சுதந்திரங்கள் மீண்டும் மீண்டும் மீறப்பட்டது குறித்த தனது கவலைகளை வெளிப்படுத்தியது. அதிகாரங்களை பிரிப்பது அரசாங்கத்தையே நீர்த்துப்போகச் செய்யும் செயல் என்று கூறியது.

(Image: www.swissinfo.ch)