அமெரிக்க நிறுவனங்கள் சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறாது - உறுதியளிக்கிறார் சுவிஸ் தூதர்..

சுவிட்சர்லாந்திற்கும் லைக்டென்ஸ்டீனுக்குமான அமெரிக்க தூதர் எட் மேக்முல்லன், அமெரிக்க நிறுவனங்கள் அந்நாட்டின் வரிச் சீர்திருத்தத்திற்குப் பின்னர் மீண்டும் அமெரிக்காவிற்கே செல்ல "உண்மையில் எந்தக் காரணமும் இல்லை" என்றார்.
சுவிட்சர்லாந்திற்கு தங்கள் வியாபாரத்தை நகர்த்த பல நிறுவனங்கள் திட்டமிட்டதை அவர் அறிந்திருப்பதாக அவர் செவ்வாயன்று Nordwestschweiz பத்திரிகைக்கு தெரிவித்தார்.
அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்க வரித்துறை அதிகாரிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக சுவிட்சர்லாந்திற்கு தங்கள் வியாபாரத்தை நகர்த்தவில்லை, மாறாக அதற்கு முக்கிய காரணம் சுவிஸ் நாட்டின் ஒட்டுமொத்த ஈர்ப்புத் தன்மை தான் என அவர் கூறினார். "சுவிட்சர்லாந்து சக்திவாய்ந்த சைபர் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான ஒரு மையத்தை கொண்டிருக்கும் ஒரு வலுவான நிதிநிலை மையமாக உள்ளது," என்றும் அவர் கூறினார்.
சமீபத்தில் செயல்படுத்தப்பட்ட அமெரிக்க வரி சீர்திருத்தம் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சிறிய மற்றும் நடுத்தர சுவிஸ் நிறுவனங்களை அமெரிக்கா வரை தங்களது வியாபாரத்தை விரிவாக்க ஊக்குவித்துள்ளது. மற்ற நாடுகளில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அவை ஊக்கமளிக்கும் செயல்களாக அமையலாம், என மேக்முல்லன் கூறினார்.
எனினும், அமெரிக்க நிறுவனங்கள் வரி காரணங்களுக்காக சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேறக்கூடும் எனும் அச்சம் ஆதாரமற்றவை.
புதிய வாய்ப்புகள்
ஒரு வணிக இருப்பிடமாக இருக்கும் சுவிட்சர்லாந்தில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் தொடர்ந்து நன்மை பெறும், மற்றும் "அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் சில" சுவிட்சர்லாந்தில் புதிய வர்த்தக வாய்ப்புகளைத் திட்டமிட்டு வருவதாக மேக்முல்லன் கூறுகிறார். அவர் எந்தவொரு எடுத்துக்காட்டுகளையும் வழங்கவில்லை, ஆனால் மக்கள் விரைவில் அதுபற்றிய செய்திகளை கேட்பர் என்றார்.
அரசியல் விஞ்ஞானி மற்றும் முன்னாள் விளம்பர தொழில் முனைவர் மேக்முல்லன் கடந்த நவம்பர் மாதம் சுவிட்சர்லாந்தின் அமெரிக்கத் தூதராக பதவி ஏற்றார். தெற்கு கரோலினா மாகாணத்தில் டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரச்சாரத் தலைவராக இருந்தவர் இந்த 54 வயது தூதர்.
(Image: www.swissinfo.ch)