Tamil Swiss News

ரோமன் பிரிட்ஜை மீண்டும் உருவாக்க முயற்சிக்கும் பாஸல் விஞ்ஞானிகள்!

ரோமன் பிரிட்ஜை மீண்டும் உருவாக்க முயற்சிக்கும் பாஸல் விஞ்ஞானிகள்!

வடக்கு சுவிட்சர்லாந்தின் Kaiseraugst ல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்க குழிக்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன? பாஸல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அதில் பனியைக் கொண்டு நிரப்புகிறார்கள், மேலும் ரொமானியர்கள் இதனை ஒரு குளிர்சாதனப் பெட்டியாக பயன்படுத்தினரா என்பதையும் சோதித்துப் பார்க்கிறார்கள்.

Aargau மாகாணத்தின் Kaiseraugst பண்டைய ரோமன் நகரமான அகஸ்டா ராரிக்காவின் அழிந்துபோன மீதங்களைக் கொண்டிருக்கும் ஒரு நகரமாகும். பழம், காய்கறிகள், சிப்பிகள், சீஸ் மற்றும் பிற பொருட்களை சேகரிக்க இத்தகைய குழிகளை ரொமானியர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். குளிர்காலத்தில், அவர்கள் பனி மற்றும் பனிக்கட்டி கொண்டு அவற்றை நிரப்பி, வைக்கோல் மூலம் மூடிவிடுவார்கள்.

தொல்பொருள் வல்லுனர் Peter-Andrew Schwarz மற்றும் அவரது குழுவினரின் மூன்றாவது பிரிட்ஜ்-கட்டும் முயற்சி இது. இந்த முறை அவர்கள் மஜோர்காவை சேர்ந்த "நெவாடெர்ஸ்" (ஐஸ் தயாரிப்பாளர்கள்) முறையைப் பயன்படுத்துகின்றனர்.

"நாங்கள் 20-30 சென்டிமீட்டர் பனியை இதில் நிரப்பி, இறுக்கமாகக் கட்டி, அதை வைக்கோல் கொண்டு மூடி விடுவோம், பின்னர் அடுத்த அடுக்கை சேர்ப்போம்," என Schwarz சுவிஸ் நியூஸ் ஏஜென்சியிடம் கூறினார்.

பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த ஆராய்ச்சி வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும். இது இந்தக் குழிகள் நிஜமாகவே பிரிட்ஜாகத்தான் பயன்படுத்தப்பட்டன என்பதற்கு உண்மையான ஆதாரமல்ல, ஆனால் இப்படியும் இதனை பயன்படுத்த சாத்தியம் உண்டு என்பதைக் காட்ட விரும்புவதாகக் கூறினார். ஆராய்ச்சியின் மூன்றாவது முயற்சி ஆகஸ்ட் மாதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

(Image: www.swissinfo.ch)