சுவிட்சர்லாந்தின் பெரும்பான்மை மாகாணங்களில் ஆர்கானிக் முறையில் விவசாயம்!

சுவிட்சர்லாந்தின் 25% நிலம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதாவது சுமார் 1 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் 25%. மீதமுள்ள பெரும்பகுதியை மலைகள் அல்லது காடுகள் சூழ்ந்துள்ளன. இந்த சுமார் 1 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில், 142,000 ஹெக்டேர் (13.5%) நிலம் ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்யப்படுகிறது. ஆர்கானிக் விவசாய பகுதி சதவீதங்கள், பிரதேசங்கள் மற்றும் மாகாணங்களால் வேறுபடுகின்றன.
குறைந்தளவு ஆர்கானிக் வேளாண்மை செய்யப்படும் மாகாணம் Appenzell Innerrhoden (5.2%). மிக அதிகமான ஆர்கானிக் வேளாண்மை செய்யப்படும் மாகாணம் Graubunden (63%).
பிற மாகாணங்கள் மற்றும் அவை கொண்டுள்ள ஆர்கானிக் விவசாய பகுதிகள்: ஜெனீவா (7.8%), வூட் (6.3%), வாலய்ஸ் (18.6%), பெர்ன் (11.2%), பாஸல்-சிட்டி (27.0%) மற்றும் ஜூரிச் (11.4%)
மிகச் சிறியளவு மாவட்ட மட்டத்தில் ஆர்கானிக் விவசாய பகுதிகள் அதிகமாக உள்ளன. மிக அதிக ஆர்கானிக் வேளாண்மை கொண்ட மாவட்டம் Graubunden மாகாணத்தில் உள்ள Bernina (83%) மாவட்டம், மற்றும் குறைந்தபட்ச ஆர்கானிக் வேளாண்மை கொண்ட மாவட்டம் Vaud மாகாணத்தில் உள்ள Ouest Lausannois (0%) மாவட்டம்.
2016 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் சராசரி விவசாய நில பரப்பளவு 20.1 ஹெக்டேர். ஆர்கானிக் விவசாய நிலம் சராசரியாக 22.4 ஹெக்டேர் பரப்பளவில் இருந்தன, அதே நேரத்தில் ஆர்கானிக் அல்லாத விவசாய நிலம் 19.8 ஹெக்டேர் இருந்தன.
பொதுவாக, ஆர்கானிக் விவசாயம் செய்ய நிலவியல் முக்கிய காரணியாகிறது. மலைப்பாங்கான Graubunden-இல் (63%), சமதளத்தில் உள்ள Fribourg -ஐ (6.3%) விட அதிகளவில் ஆர்கானிக் விவசாயம் செய்யப்படுகிறது.
பல்வேறு விவசாய பொருட்கள் பல்வேறு உயரத்தில் வளர்கின்றன. உயரம் குறைந்தால், பணியாட்கள் தேவைப்படாத வேளாண் வேதிப்பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கும்.
(Image: lenews.ch)