சர்ச்சைக்குரிய Moutier வாக்கெடுப்பு தொடர்பான 'நெருக்கடிநேர உச்சிமாநாடு'க்கு அழைப்பு விடுத்துள்ளார் நீதித்துறை மந்திரி!

ஒரு வாக்கெடுப்பிற்கு பின்னர் Moutier நகரம் பெர்னில் இருந்து பிரிந்து ஜூரா மாகாணத்தில் இணைந்த நிலையில் சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர், சுவிஸ் நீதித்துறை அமைச்சர் சைமணெட்டா சோம்மருகா ஒரு கூட்டத்தில் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக விவாதிக்க இரண்டு மாகாண அரசாங்கங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
மே மாத இறுதிக்குள் வாக்கெடுப்பின் செல்லுபடியாகும் நிலை பற்றி பேசும் "நெருக்கடிநேர உச்சிமாநாடு" நடைபெற வேண்டும் என சோம்மருகா தெரிவித்துள்ளதாக SonntagsZeitung நாளிதழ் தனது ஞாயிறு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலைமையை பகுப்பாய்வு செய்வது அவசியம் என்றும் நீதித்துறை அமைச்சர் கூறினார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த ஜேர்மன் மொழிப் பத்திரிகை, "தேர்தல் சுற்றுலா" ஜூன் 2017 ல் நடைபெற்ற வாக்கெடுப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம், அதற்கான சாத்தியமும் உள்ளது என அறிக்கையிட்டுள்ளது; இந்த வாக்கெடுப்பின் முடிவில், 137 வாக்குகள் வித்தியாசத்தில் Moutier நகரம் பெர்னிலிருந்து பிரிந்து செல்ல முடிவெடுத்தது. மொத்தம் 4,000 குடிமக்கள் இந்த வாக்குப்பதிவில் பங்கு பெற்றனர் (88%) - இது வழக்கமாக எண்ணிக்கையை விட அதிகம் ஆகும்.
மோசடியால் அமைதியின்றி தவித்த Moutier நகரம் கடந்த வியாழனன்று ஃபெடரல் கவுன்சிலின் உதவியை நாடியது. Moutier நகர மேயர் Marcel Winistoerfer தேர்தல் சுற்றுலா (மக்கள் ஒரு நகராட்சியில் குடியேறாமலேயே அங்கு வாழ்வதாக பதிவுசெய்வது) மீதான சந்தேகங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
(Image: www.swissinfo.ch)