Tamil Swiss News

கட்டாய குழந்தைப் பணியாளர்கள் இழப்பீடு கோர விரைகின்றனர்..!

கட்டாய குழந்தைப் பணியாளர்கள் இழப்பீடு கோர விரைகின்றனர்..!

அரசாங்க திட்டத்தின் மூலம் இழப்பீடு பெற விண்ணப்பித்துள்ள முன்னாள் "கைவிடப்பட்ட குழந்தைகளின்" எண்ணிக்கை ஈஸ்டர் காலக்கெடுவை முன்னிட்டு உச்சத்தை அடைந்துள்ளது. 

பெரும்பாலும் துஷ்பிரயோகம் அல்லது புறக்கணிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட, கட்டாய பணியாளர் கொள்கைகள் அல்லது நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றியவர்களுக்கு சுவிட்சர்லாந்து CHF 25,000 ($ 26,200) இழப்பீட்டுத் தொகையை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

ஆண்டு தொடக்கத்தில் இழப்பீடு கோரப்பட்ட மக்கள் எண்ணிக்கை 4,500 ஆக இருந்தது. ஆனால் மார்ச் 30 ம் தேதி அந்த எண்ணிக்கை 7,839 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய நீதி அலுவலகம் சுவிஸ் பொது தொலைக்காட்சியான SRF இடம் தெரிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டில் இழப்பீடு பெறும் முயற்சியைத் தொடங்கிய Guido Fluri, கடைசி நேரத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்ததற்கு கடந்த சில மாதங்களில் செய்யப்பட்ட தகவல் பிரச்சாரங்கள் தான் முக்கிய காரணம் என்றார். இந்த முன்முயற்சியின் ஆதரவாளர்கள் 8,000 க்கும் அதிகமான கோரிக்கைகள் வரும் என நம்புகின்றனர். மார்ச் 31 ம் தேதியே அதிகாரப்பூர்வ காலக்கெடுவாகும், ஆனால் SRF அறிக்கையின்படி, கோரிக்கைகளை செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 2, நள்ளிரவு வரை சமர்ப்பிக்கலாம்.

பெரும் முயற்சி

8,500 கோரிக்கைகள் எதிர்பார்க்கப்பட்டதாக நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் சுமார் 10,000 -15,000 கோரிக்கைகளுக்கு கூட இது தயாராக இருந்தது. நிர்வாகத்தின் பணியில் அச்சுறுத்தலைக் கண்டறிந்தது அல்லது அதிகாரிகளைக் கண்டு அஞ்சியது போன்ற காரணங்களால் பலர் இதற்கு விண்ணப்பிக்கவில்லை எனும் குற்றச்சாட்டுக்களை அமைச்சகத்தின் Claudia Scheidegger நிராகரித்தார். அதிகாரிகள் மக்களை தொடர்பு கொள்ள தங்கள் அதிகாரம் அனைத்தையும் பயன்படுத்தி முயற்சி செய்தனர், 10,000 க்கும் அதிகமான கடிதங்களை பல்வேறு அமைப்புக்களுக்கும், பாதுகாப்பு இல்லங்களுக்கும் அனுப்பி வைத்தனர், என அவர் SRF அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

மக்கள் தங்கள் வலிமிக்க வரலாறுகளை திரும்பிப்பார்க்க விரும்பாததால் இதில் ஆர்வம் காட்டவில்லை எனும் செய்திகளை அமைச்சகம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடததக்கது.

(Image: www.swissinfo.ch)