Tamil Swiss News

பயணிகள் விமானத் தரவுகளை குறிவைக்கும் சுவிட்சர்லாந்து..

பயணிகள் விமானத் தரவுகளை குறிவைக்கும் சுவிட்சர்லாந்து..

தீவிர குற்றங்களை தடுக்க பயணிகள் விமானம் பற்றிய தகவல்களை அணுக சுவிட்சர்லாந்துக்கு அனுமதி இருக்க வேண்டும், என மத்திய போலீஸ் அலுவலகத்தின் தலைவர் கூறுகிறார்.

ஒவ்வொரு வருடமும் சுமார் 50 மில்லியன் பயணிகள் பெயர் பதிவுகள் (PNR) தரவு சுவிட்சர்லாந்தில் பரிமாற்றப்படுகின்றன, என்று அலுவலகத்தின் தலைவர் நிகோலட்டா டெல்லா வால்லி சுவிஸ் பொது வானொலியிடம் (SRF) கூறினார்.

மே மாத இறுதியில் இருந்து, ஐரோப்பாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் விமானங்கள் பற்றிய தரவுகளை வழங்க சுவிட்சர்லாந்து கடமைப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். ஏற்கனவே அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் தரவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

"சுவிட்சர்லாந்து சரியாக இந்தத் தரவுகளை பெற்று மதிப்பீடு செய்யுமா எனும் கேள்வி தற்போது எழுந்துள்ளது," என டெல்லா வால்லி கூறினார்.

இந்த விவகாரத்தில் அவர் அரசிற்கு ஒரு சட்டபூர்வ முன்மொழிவை முன்வைக்க விரும்புகிறார், அங்கு நிறைவேற்றப்பட்டால் பின்னர் பாராளுமன்றத்தில் முன்மொழியவுள்ளார்.

போலீஸ் அலுவலகம் தீவிர குற்ற வழக்குகளுக்கான தரவுகளை அணுக விரும்புகிறது. 30 ஆய்வாளர்கள் கொண்ட ஒரு குழு அலுவலகத்திற்குள் அமைக்கப்படும், பின்னர் அந்தக் குழு மூலம் மதிப்பீடு செய்யப்படும்.

தரவு, எடுத்துக்காட்டாக, பெயர், கடன் அட்டை விவரங்கள் மற்றும் பயண தேதிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். ஐரோப்பிய ஒன்றியம் 2016 ஆம் ஆண்டில் நீண்டகால விவாதத்திற்கு பின்னர் PNR உத்தரவை வழங்கியது, 2018 ஆம் ஆண்டு மே மாதம் அது நடைமுறைக்கு வரும். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விமான சேவைகளை வழங்கிவரும் ஏர்லைன்ஸ்கள், பயணிகள் விவரங்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வழங்க கடமைப்பட்டுள்ளது. தரவுகள் ஆறு மாதங்களுக்கு பாதுகாக்கப்படும், பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்தவும், தீவிரமான குற்றங்களுக்கு எதிராக உதவவும் இந்த தரவுகளை பத்திரப்படுத்துவது முக்கியமாகிறது.

(Image: www.swissinfo.ch)