Tamil Swiss News

வரலாற்றுச் சிறப்புமிக்க சுவிஸ் பாலத்தில் தீவிபத்து..!

வரலாற்றுச் சிறப்புமிக்க சுவிஸ் பாலத்தில் தீவிபத்து..!

வடக்கு சுவிட்சர்லாந்தில் 200 ஆண்டு பழமையான மரப் பாலத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பல நூறு ஆயிரம் சுவிஸ் பிராங்க்குகள் மதிப்பிலான சேதம் ஏற்பட்டது. ஒரு சிகரெட் துண்டு இதற்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கடந்த புதனன்று, பாசெல், பெர்ன் மற்றும் ஜூரிச் நகரங்களுக்கு இடையே உள்ள ஒரு நகரமான ஒல்டனில் தீவிபத்து நிகழ்ந்தது. சரியாக அணைக்கப்படாத பொருள் ஒன்று தான் இதற்கு காரணமாக இருக்கக்கூடும், ஆனால் அது சிகரெட் துண்டா அல்லது வேறு ஏதேனுமா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என வியாழன் அன்று அதிகாரிகள் கூறினர்.

1803 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மரப் பாலம் 'ஆரே' ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. அதிகமாக காற்று வீசிய காரணத்தால், தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு பின்பே தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

பாலம் சரியும் ஆபத்து எதுவும் இல்லை என்று அதிகாரிகள் கூறினர், ஆனால் அடுத்த புதன்கிழமை வரை மூடப்பட்டிருக்கும்.

பழுதுபார்ப்பின் போது, ஒரு அவசர பாலம் பாதசாரிகளுக்கு உதவ நிறுவப்படும், ஆனால் அதன் சீரற்ற மேற்பரப்பு சக்கர நாற்காலிகளுக்கு மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஏற்றதாக இல்லை. இந்த தற்காலிக பாலம் - 40 மீட்டர் நீளம் மற்றும் இரண்டு மீட்டர் அகலம் - ஆறு மாதங்களுக்கு வைக்கப்பட்டு இருக்கும்.

மேலும் புதன்கிழமை, வடகிழக்கு சுவிட்சர்லாந்திலுள்ள டிஸ்சென்ஹோபனில் மற்றொரு மரப் பாலம் தீபிடித்தது. அந்த நெருப்பை அணைத்துவிட்டு சுத்தம் செய்ய இரண்டு மணிநேரம் மட்டுமே ஆயிற்று.

1993 ஆம் ஆண்டில், லூசெர்னில் உள்ள பிரபலமான சாப்பல் பாலத்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி கிட்டத்தட்ட பாலம் முழுவதுமே எரிந்து நாசமாகியது குறிப்பிடத்தக்கது.

(Image: http://www.swisstraveler.net)