Tamil Swiss News

வெனிசுலாவின் சொத்துக்களை முடக்கி பொருளாதாரத் தடைகள் விதித்தது சுவிட்சர்லாந்து..

வெனிசுலாவின் சொத்துக்களை முடக்கி பொருளாதாரத் தடைகள் விதித்தது சுவிட்சர்லாந்து..

வெனிசுலாவிற்கு எதிராக தொடர்ச்சியான பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது சுவிட்சர்லாந்து. இதன்மூலம் அந்த தென் அமெரிக்க நாடு மீதுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக அந்நாட்டின் மீது பல்வேறு தடைகளை விதித்துள்ள மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் சுவிட்சர்லாந்து இணைந்துள்ளது.

கடந்த புதன்கிழமை, சுவிஸ் அரசாங்கம் ஏழு வெனிசுலா அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் உட்பட்ட வெனிசுலா மக்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களின் சொத்துக்களை முடக்கியும் மற்றும் பயண தடைகளை விதித்தும் உத்தரவிட்டது.

ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், முன்னாள் தேசிய சட்டசபைத் தலைவர் டயஸ்டாடோ காபெல்லோ, உள்துறை மந்திரி நெஸ்டர் ரெவரோல் மற்றும் தலைமை நீதிபதி மைக்கேல் மொரேனோ ஆகியோரும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

"வெனிசுலாவில் தனிப்பட்ட சுதந்திரங்கள் மீண்டும் மீண்டும் மீறப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது. அதிகாரங்களை பிரிப்பதற்கான கொள்கை கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுவதோடு, எதிர்வரும் தேர்தல்களின் செயல்முறையானது முறையான சட்டபூர்வ குறைபாடுகளால் பாதிக்கப்படுகிறது" என நடுநிலை வகிக்கும் சுவிட்சர்லாந்து தெரிவிக்கிறது.

சூப்பர்பாடி

வெனிசுலாவின் எதிர்க்கட்சி 2015 சட்டமன்றத் தேர்தல்களில் பரந்த பெரும்பான்மையை வென்றது, ஆனால் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் அதிபர் நிக்கோலஸ் மடுரோவின் கூட்டாளிகள் உச்சநீதிமன்றத்தின் பல அதிகாரங்களை களைந்ததோடு, அது ஒப்புதல் அளித்த சட்டத்தின் சிறு துண்டுகளை கூட விடாமல் அனைத்தையும் முறையாக சுட்டு வீழ்த்தியது.

மடுரோ, கடந்த ஆண்டு, அதன் அதிகாரங்களை எந்த முறையான சரிபார்த்தலுக்கும் உட்படுத்த முடியாத அரசியலமைப்பு சட்டமன்றம் என்று அழைக்கப்படும் ஒரு சட்டபூர்வ சூப்பர்பாடியை உருவாக்க வழிவகுத்தார். அதன் உருவாக்கமே மடுரோவை ஒரு சர்வாதிகாரி என விவரிக்க பல உலக நாடுகளுக்கு வழிவகுத்தது.

சுவிஸ் விதித்துள்ள தடைகள், உள்நாட்டு அடக்குமுறைக்கு பயன்படுத்தப்படலாம் என்ற காரணத்தினால் ஆயுதங்கள் மற்றும் பொருட்களை வெனிசுலாவுக்கு விற்பனை அல்லது ஏற்றுமதி செய்வதைத் தடைசெய்கின்றன. மேலும், தொலைபேசி தகவல்தொடர்புகள் மற்றும் இணையத்தை இடைமறிக்க பயன்படுத்தக்கூடிய உபகரணங்களையும் விற்பனை அல்லது ஏற்றுமதி செய்வதைத் தடைசெய்கின்றன.

(Image: www.swissinfo.ch)