சுவிட்சர்லாந்தில் பிரெஞ்சு மற்றும் வெளிநாட்டு மொழிகள் பயன்பாடு அதிகரிப்பு..!

கடந்த 40 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் மொழியியல் நிலவரம் மாறிவிட்டது, என நீண்டகால அறிக்கை ஒன்று கூறுகிறது. 1970 களில் இருந்து ஜெர்மன் (மற்றும் ஸ்விஸ் ஜெர்மன்), இத்தாலியன் மற்றும் ரோமன் ஆகிய மொழிகளின் பயன்பாடு குறைந்துவிட்ட நிலையில், பிரெஞ்சு மற்றும் தேசிய மொழி அல்லாத மொழிகள் பயன்பாடு அதிகரித்தன.
சுவிஸ் ஜேர்மன் மொழியை முதன்மையாக பேசும் மக்களின் விகிதம் 1970 முதல் 2016 வரையான காலத்தில் 66% இருந்து 63% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது என கடந்த புதனன்று மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இத்தாலியன் பேசுபவர்கள் எண்ணிக்கை 11% இருந்து 8% வரையும் மற்றும் ரோமன் பேசுபவர்கள் எண்ணிக்கை 0.8% இருந்து 0.5% ஆகவும் சரிந்தது.
இதற்கு மாறாக இதே நேரத்தில், நாட்டில் பிரெஞ்சு பேசுபவர்கள் விகிதம் 18% முதல் 23% வரை உயர்ந்துள்ளது.
ஒரு சுவிஸ் தேசிய மொழியை முதல் மொழியாக பேசாத மக்களின் விகிதம் கணிசமாக அதிகரித்தது: 1970 இல் 4% ஆக இருந்தது 2016 இல் 22% ஆக இருந்தது.
வினாப்பட்டியலில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தின் விளைவாகவே இந்த அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது, இதனால் 2010 ஆம் ஆண்டிலிருந்து பல பிரதான மொழிகளை மக்கள் குறிப்பிடுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டது என்று புள்ளியியல் அலுவலகம் கூறுகிறது. ஆங்கிலம் மற்றும் போர்த்துகீசிய மொழி ஆகிய இரு வெளிநாட்டு மொழிகள் தான் பெரும்பாலும் குறிப்பிடப்பட்டுள்ளவை.
வீடு vs வேலை
சுவிஸ் ஜெர்மன் மொழியே பணியிடங்களில் அடிக்கடி பேசப்படும் (65%) மொழி, இதனை தொடர்ந்து ஜெர்மன் (35%) மற்றும் பிரெஞ்சு (29%) பேசப்படுகின்றன. சில 19% மக்கள் ஆங்கிலத்தில் பேசுகின்றனர் மற்றும் 9% இத்தாலிய மொழியில் பேசுகின்றனர் .
வீட்டில் அல்லது உறவினர்களுடன் பேசும்போது, பொதுவாக சுவிஸ் ஜெர்மன் (59%) அல்லது பிரெஞ்சு (24%) பேசுகிறார்கள். ஒரு குடும்பத்தில் பேசப்படும் மற்ற மொழிகள் ஜெர்மன் (11%) மற்றும் இத்தாலியன் (8%) ஆகும். ஆங்கிலம் (5%) மற்றும் போர்த்துகீசியம் (4%) ஆகியவை இந்த சூழலில் குறிப்பிடப்பட்ட அடிக்கடி பயன்படுத்தும் வெளிநாட்டு மொழிகள் ஆகும்.
(Image: www.swissinfo.ch)