பெரிய நகரங்களில் பத்துக்கு ஒன்பது சுவிஸ்வாசிகள் வாடகை வீட்டில் வசிக்கின்றனர்..

ஜெனீவா, ஜூரிச் மற்றும் லொசான் ஆகியவை வாடகைக்கு வசிக்கின்ற மக்களில் அதிகமான மக்கள் வசிக்கும் ஸ்விஸ் நகரங்களாகும். கடந்த புதன் அன்று மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பத்து வீடுகளில் ஒன்பது வீடுகள் வாடகை வீடுகளாக உள்ளன.
ஜெனீவாவில் 91.4% மக்கள் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள். இந்த விகிதம் லொசான் (90.3%) மற்றும் ஜூரிச் (89%) ஆகிய நகரங்களிலும் கிட்டத்தட்ட அதே அளவில் தான் உள்ளன.
தேசிய அளவில், 59% சுவிஸ் குடும்பங்கள் 2012 மற்றும் 2016 க்கு இடையேயான ஆண்டுகளில் வாடகை வீடுகளில் இருந்ததாக, புள்ளிவிவர அலுவலகம் தெரிவிக்கிறது.
174 சுவிஸ் இடங்களில் நடத்திய ஆய்வில், வீட்டு உரிமையாளர்கள் எட்டு இடங்களில் மட்டுமே பெரும்பான்மையாக இருக்கின்றனர்.
வீட்டு உரிமையாளர்களின் மிகப்பெரிய விகிதம், 64.7%, கிழக்கு சுவிட்சர்லாந்தில் ஒரு மலை கிராமமான Obersaxen இல் காணப்பட்டது. பிரெஞ்சு பேசும் சுவிட்சர்லாந்தில் உள்ள இரு கிராமங்கள், வீட்டு உரிமையாளர் விகிதங்களில் முறையே 58.3% மற்றும் 56.7% என இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன.
(Image: www.swissinfo.ch)