Tamil Swiss News

சுவிட்சர்லாந்தில் குற்றங்கள் குறைந்துவருகின்றன..!

சுவிட்சர்லாந்தில் குற்றங்கள் குறைந்துவருகின்றன..!

கடந்த வருடத்தில் 6.1% வரை குற்றங்கள் குறைந்துள்ளன. சுவிஸ்-அல்லாத குற்றவாளிகளால் செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் 429,000 குற்றங்கள் பதிவாகியுள்ளன, இது 2012 ஐ ஒப்பிடும்போது 170,000 குறைவு என மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் அறிக்கை கூறுகிறது.

நம் நாட்டில் நடந்த குற்றங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக குறைந்து வருகின்றன என அவர்கள் தெரிவித்தனர்.

குறைந்த கொள்ளை சம்பவங்கள்

சுவிட்சர்லாந்தில் உள்ள அனைத்து கிரிமினல் குற்றங்களிலும் மூன்றில் இரண்டு பங்காக இருக்கும் கொள்ளை குற்றங்கள் முந்தைய ஆண்டை விட 6% குறைந்துள்ளது.

கார் திருட்டுக்கள் இல்லாத கொள்ளை சம்பவங்கள் 15 சதவிகிதமும் மற்றும் மோசடி சம்பவங்கள் 16 சதவிகிதமும் குறைந்துள்ளன.

இணைய குற்றம்

சைபர் கிரைம் எனப்படும் இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சுமார் 9% வரை அதிகரித்துள்ளன. இந்த வகை குற்றங்களில் மிகவும் பொதுவானதாக மோசடி சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத தரவு சேகரிப்பு ஆகியவை இருக்கின்றன.

சுவிட்சர்லாந்தில் அனுமதி இல்லாமல் வசிக்கும் வெளிநாட்டினர் செய்த குற்றங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5% வீழ்ச்சியுற்றதாக அந்த அறிக்கை கண்டறிந்துள்ளது. குற்றச்செயல்களில் பெரும்பகுதி, சுமார் 79%, சுவிஸ் மற்றும் வெளிநாட்டினர் உட்பட்ட நிரந்தர வசிப்பிடம் கொண்ட மக்களால் நிகழ்த்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

(Image: www.swissinfo.ch)