உளவு சட்டங்களை புறக்கணிக்கிறதா சுவிஸ் உளவுத்துறை?

பெடரல் புலனாய்வு சேவை (FIS) ஒழுங்குமுறைகளை புறக்கணித்ததாகவும், ஜெர்மேனிய வரித்துறை அதிகாரிகள் மீது உளவு பார்க்கும் சுவிஸ் உளவாளி ஒருவரை சரியாக நிர்வகிக்க தவறியதாகவும் ஒரு பாராளுமன்ற கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
ஜெர்மேனிய வரி அதிகாரிகளை உளவு பார்த்தாக உளவாளி டேனியல் மோசெர் என்பவரை ஜெர்மேனிய நீதிமன்றம் கடந்த நவம்பரில் கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த விஷயத்தில் FIS இன் பங்கு என்ன என்பது பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், பாராளுமன்ற கட்டுப்பாட்டுக் குழு, இந்த வழக்கில் வெளிநாட்டில் இருந்து தரவு சேகரிக்கப்படுவதை தடை செய்யும் சட்டத்தை மீறியதாக FIS ஐ குற்றம் சாட்டுகிறது. "வெளிநாடுகளில் இருந்து தரவு சேகரிக்கும் செயல்கள் அனுமதிக்கப்படக்கூடாது" என்று அது கூறியது.
விசாரணையில் பெரிதும் பயனற்ற தகவலை FIS சேகரித்தது எனவும், உளவாளியை மோசமாக கையாண்டது எனவும், சட்டத்தை மீறியுள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
டேனியல் மூலம் பெறப்பட்ட வரி அதிகாரிகளின் தனிப்பட்ட விவரங்கள் கூடுதல் புலனாய்வு சேகரிப்பு இல்லாமல் ஏற்கனவே FIS க்கு கிடைத்திருக்கின்றன. கூடுதலாக, டேனியல், பல ஜெர்மன்வாசிகளிடம் சட்டவிரோதமாக அந்த தரவுகளை பகிர்ந்துள்ளார், அந்த ஜெர்மன்வாசிகள் பின்னர் இந்த வழக்கின் இணை பிரதிவாதிகளாக மாறியுள்ளனர். இப்படித்தான் அந்த கோப்புக்கள் ஜெர்மன் வழக்கு விசாரணைக்கு வந்தடைந்தது, இறுதியாக மோசெர் கைதுசெய்யப்பட்டார்.
எதிர்காலத்தில், ஒரு உளவுத்துறை ஆதாரத்தின் பயன்பாடு அவசியமான சட்ட அடிப்படையிலானது என்று FIS உறுதி செய்ய வேண்டும் என இக்குழு பரிந்துரைக்கிறது. இறுதியாக, பாதுகாப்பு அமைச்சகம், FIS தலைவர் தொடர்ச்சியாக எந்த உளவுத்துறை நடவடிக்கையையும் ஆராய்ந்து கண்காணிக்கிறாரா என உறுதி செய்யவேண்டும் என்று பரிந்துரைக்கிறது.
(Image: www.swissinfo.ch)