Tamil Swiss News

தூய்மை அடைகிறது சுவிஸ் மின்சாரம்

தூய்மை அடைகிறது சுவிஸ் மின்சாரம்

அரசாங்க புள்ளிவிபரங்களின்படி, சுவிட்சர்லாந்தில் நுகரப்படும் மின்சாரம் பசுமையானதாக மாறி வருகிறது. 62% மின்சாரம் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து பெறப்படுகிறது, அதே நேரத்தில் அணுசக்தியில் இருந்து எடுக்கப்படும் மின்சாரம் 17% வீழ்ச்சியடைந்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் மின்சார வழங்குநர்கள் பயன்படுத்தும் ஆதாரங்களை ஒவ்வொரு ஆண்டும் சேகரிக்கும் எரிசக்தி மத்திய அலுவலகம், கடந்த திங்களன்று (பிரஞ்சு / ஜேர்மன் மொழியில்) அறிக்கை வெளியிட்டது. சமீபத்திய அறிக்கை 2016 இல் சேகரிக்கப்பட்டதாகும்.

எதிர்பார்த்தபடி, நீர்மின்சாரமே மின்சாரத்திற்கு மிகப் பெரிய ஆதாரமாக இருக்கிறது, சுமார் 56% மின்சாரம் இதிலிருந்து பெறப்படுகிறது. முந்தைய ஆண்டை விட 2.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மற்ற புதுப்பிக்கத் தக்க மின்சார ஆதாரங்களான சூரிய ஒளி, காற்று, பயோமாஸ் மற்றும் சிறிய அளவிலான நீர்நிலை மின்சாரம் ஆகியவற்றின் மின்சார உற்பத்தி 5.9% உயர்ந்துள்ளது. இது 2015 இல் இருந்ததை விட ஒரு புள்ளி அதிகம்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால், 2016 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் வழங்கப்பட்ட மின்சாரத்தில் ஐந்தில் மூன்று பங்கு புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணுசக்தி மின்சார பயன்பாடு சற்று குறைந்து 20.7 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக வீழ்ச்சியுற்றது. மற்றொரு 20 சதவீதம் சரிபார்க்கப்படாத ஆதாரங்களில் இருந்து வருகிறது.

(Image: www.swissinfo.ch)