Tamil Swiss News

Côte d’Ivoire நாட்டுடனான அறிவியல் ஒத்துழைப்பில் கவனம் செலுத்துகிறது சுவிட்சர்லாந்து

Côte d’Ivoire நாட்டுடனான அறிவியல் ஒத்துழைப்பில் கவனம் செலுத்துகிறது சுவிட்சர்லாந்து

சுவிஸ் பொருளாதார அமைச்சர் Johann Schneider-Ammann, இரு நாடுகளுக்கும் இடையே அறிவியல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து, Côte d’Ivoire நாட்டுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார்.

Côte d’Ivoire, ஆப்பிரிக்காவில் உள்ள சுவிட்சர்லாந்தின் எட்டாவது மிக முக்கியமான வர்த்தக நண்பராக இருக்கிறது. மேலும் 30 க்கும் மேற்பட்ட சுவிஸ் நிறுவனங்கள் இந்த மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் அமைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நேரடியாக CHF 300 மில்லியன் (317 மில்லியன் டாலர்கள்) தொகையை இந்த நாட்டில் முதலீடு செய்துள்ளது.

Schneider-Ammann, உள்ளூர் ஆராய்ச்சி மையம் மற்றும் சுவிஸ் பல்கலைக்கழகங்களுக்கிடையே எதிர்கால ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், என திங்கட்கிழமை சுவிஸ் செய்திகள் ஏஜென்சி அறிக்கையிட்டுள்ளது.

சுவிஸ்-ஆப்பிரிக்க ஆராய்ச்சி ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்குடன் 60 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது The Centre Suisse de Recherches Scientifiques en Côte d’Ivoire (CSRS). Schneider-Ammann மையத்தை பார்வையிட்ட பின் அதனை "சர்வதேச ஒத்துழைப்புக்கான மாதிரி" என்றார்.

சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அரசாங்க உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளின் உறுப்பினர்கள் ஆகியோர் Schneider-Ammann உடன் சென்றுவந்துள்ளனர்.

சாக்லேட்டின் முக்கிய மூலப்பொருளான கொக்கோ, மேற்கு ஆப்பிரிக்காவில் விளையும் மிக இலாபகரமான பயிர் ஆகும்.

(Image: www.swissinfo.ch)