Tamil Swiss News

பள்ளி மாணவர்களின் மனஅழுத்தத்திற்கு பெற்றோர்கள் காரணமா?

பள்ளி மாணவர்களின் மனஅழுத்தத்திற்கு பெற்றோர்கள் காரணமா?

தொடக்க பள்ளி மாணவர்களிடையே மன அழுத்தம் அதிகரிப்பதற்கு பெற்றோர்கள் தான் முக்கிய காரணம் என்கிறது சுவிஸ் இளைஞர் நலன் குழு.

சுவிட்சர்லாந்தில் பதினொரு வயது குழந்தைகளில் 27 சதவிகிதம் பேர் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 15 சதவிகிதம் பேர் நிலையான மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 2014 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு மூலம் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. கூடுதலாக, 12% பேர் தொடர் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுவிஸ் பொது தொலைக்காட்சி அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், சுவிஸ் நகரமான பேஸல் நகரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியராகவும், Pro Juventute அறக்கட்டளைத் தலைவராகவும் இருக்கும் Katja Wiesendanger, பள்ளிகளில் மாணவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதில்லை என்று கூறினார். சில குழந்தைகளுக்கு மத்தியில் மன அழுத்த அறிகுறிகள் இருப்பதை பள்ளிகள் அறிந்திருப்பதாக அவர் ஒப்புக் கொண்டார், ஆனால் இந்த பிரச்சினைகளின் ஆதாரம் பற்றி அவர் கேள்வி எழுப்பினார்.

கல்விக்கு அதிகரித்துவரும் முக்கியத்துவத்தை சரியாகப் புரிந்துகொள்ளாத பெற்றோர்களை அவர் குற்றம் சாட்டினார். "பெற்றோர்களிடையே ரெலிகேஷன் குறித்து ஒரு பயம் இருக்கிறது, அவர்கள் தங்கள் குழந்தைகள் மீது அந்த அழுத்தத்தை திணிக்கிறார்கள்."

கடந்த அக்டோபரில், குழந்தைகள் தங்கள் சொந்த விருப்பங்களை பின்பற்றுவதற்கு இன்னும் அதிக நேரத்தை கொடுக்க வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காக பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டது Pro Juventute.

(Image: www.swissinfo.ch)