பெர்ன் வெடிகுண்டு அச்சுறுத்தல்: ஆபத்து எதுவும் இல்லை

சுவிஸ் தலைநகரான பெர்ன் நகரில் இம்மாத தொடக்கத்தில் ஒரு தேவாலயத்தில் வெடிகுண்டை வெடிக்கச் செய்யப்போவதாக அச்சுறுத்திய இளைஞன் ஆபத்தான எதையும் வைத்திருக்கவில்லை என விசாரணைக்கு பின்னர் போலீஸார் தெரிவித்தனர்.
பெர்ன் மாகாண போலீஸார் கடந்த வெள்ளியன்று, இந்த சம்பவத்தால் தீ அல்லது வெடி விபத்து ஆபத்து எதுவும் இல்லை என்று கூறினர். மக்களுக்கோ அல்லது அவசர சேவைகளுக்கோ ஆபத்து எதுவும் இல்லை, என போலீஸ் செய்தித் தொடர்பாளர் விளக்கினார்.
அந்த 21 வயதான ஆப்கன் நபர் இன்னும் காவலில் வைக்கப்பட்டு உள்ளார், மேலும் அவர்மீது உளவியல் சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது என போலீஸார் கூறினர். இளைஞரின் நோக்கங்களும், அவர் செய்த விஷயங்களின் பின்னணியும் தொடர்ந்து விசாரிக்கப்படுகின்றன.
பெர்ன் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அடுத்து உள்ள தேவாலயத்தில் மார்ச் 2 ம் தேதி பிற்பகலில் குண்டு வெடிப்பை நிகழ்த்தப்போவதாக இந்த இளைஞன் அச்சுறுத்தினான். இது ஒரு பெரிய அளவிலான் போலீஸ் நடவடிக்கையை தூண்டியது, மேலும், பொது போக்குவரத்துக்கு கணிசமான பாதிப்பையும் ஏற்படுத்தியது.
(Image: www.swissinfo.ch)