சுவிஸ் உதவி மாநாடு: பசி, பட்டினி பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் என எச்சரிக்கை!

உலகம் தற்போது உற்று நோக்க வேண்டிய மிக முக்கிய மனிதாபமான பிரச்சனை பசி, என சுவிஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர் இக்னாஸியோ காசிஸ் வருடாந்த சுவிஸ் மனிதாபிமான உதவி மாநாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
"ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 4,600 கலோரிகளை நாம் உற்பத்தி செய்கிறோம், இது முழு உலகிற்கு உணவளிக்கும் அளவில் இரு மடங்கு ஆகும்" என்று அவர் கூறினார். "அப்படியிருந்தும் ஒன்பது நபர்களில் ஒருவர் ஒவ்வொரு இரவும் பசியில் தூங்கச் செல்கிறார், அது அபத்தமானது."
அரசாங்கத்தின்படி, இந்த ஆண்டில் முக்கிய கவனம், சுவிட்சர்லாந்தும், சர்வதேச சமூகமும் பசி, அதன் காரணங்கள் மற்றும் சிக்கல்கள் ஆகியவற்றை எப்படி எதிர்கொள்கின்றன என்பதிலேயே இருக்கிறது.
SDCயின் தலைவரான மானுவல் சாகர், உணவுக்கான அணுகல் மிகவும் பரவலான சிக்கலாக மாறியுள்ளதாக தெரிவித்தார். "கிராமப்புறங்களில் மக்கள் விவசாய நிலங்களில் இருந்து விரட்டப்பட்டு வருகின்றனர், மற்றும் நகரங்களில் உணவு சப்ளையானது சண்டையால் தொடர்ந்து பலமுறை தடைபடுகிறது," என்று ஒரு குழு விவாதத்தில் அவர் கூறினார்.
2017 பிப்ரவரியில் சுவிட்சர்லாந்து, ஆப்ரிக்கா மற்றும் யேமன் ஆகிய நாடுகளுக்கு, அடிக்கடி தடை ஏற்படும் சாலை வழி உதவியை விட ஐ.நா-வின் வான்வழி உதவி மூலம் கூடுதலாக CHF 15 மில்லியன் டாலர் தொகையை வழங்கியுள்ளது.
உலக உணவுத் திட்டத்தின் (WFP) நிர்வாக இயக்குனர் டேவிட் பேஸ்லே, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கடுமையான பசி சுமார் 55% வரை உயர்ந்துள்ளது என்கிறார். "குறிப்பாக ஆயுதமேந்திய மோதல்களின் காரணமாக," என்று கூறுகிறார். மோதல் மற்றும் பசி ஆகியவை இணைந்து அதிக உறுதியற்ற தன்மையை உருவாக்குகிறது, மேலும் வன்முறை, துயரம் மற்றும் கட்டாய இடம்பெயர்தல் ஆகியவற்றையும் உருவாக்குகிறது என்றும் கூறினார்.
(Image: www.swissinfo.ch)