ரயில் அறிவிப்புகள் கணினிமயமாக்கப்படுகிறது!

சுவிட்சர்லாந்தில் உள்ள அனைத்து ரயில் பயணிகளுக்கும் மிகவும் பரிச்சயமான பெண் குரலுக்கு பதிலாக இனி கணினி தான் குரல் கொடுக்கப் போகிறது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு, SBB அதன் அறிவிப்பு முறையை நவீனமயமாக்கப் பார்க்கிறது, என சுவிஸ் பிராந்திய தினசரி பத்திரிக்கை Aargauer Zeitung அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரயில் கம்பெனி தானியங்கி முறையிலான சிஸ்டத்தை ஒரு பைலட் திட்டத்துடன் துவக்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் ரயில் நெட்வொர்க் பற்றிய முழுமையான மேம்படுத்தப்பட்ட மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட தரவுகள் பேச்சுக்களாக மாற்றியமைக்கப்படும்.
திட்டமிட்ட புதிய அமைப்பின் கீழ், ரயில் ஊழியர்கள் பயணிகளுக்கு காலை வணக்கம் சொல்வது அல்லது தாமதத்திற்கு மன்னிப்பு கேட்பது போன்றவை இனியும் தொடருமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் ஒரு விஷயம் தெளிவாக உள்ளது: 2019 வசந்த காலத்தில் செயல்படுத்தவிருக்கும் பைலட் திட்டம் வெற்றிபெற்றால், SBB-இன் எந்த புதிய குரலும் ஒரு பெண்ணின் குரலாகத்தான் இருக்கும்.
"பேச்சாளர்கள் பெண்களாக இருக்க காரணம் உளவியல் ரீதியானது. பெண்களின் குரல்கள் எப்போதும் இனிமையாக, விரும்பத்தக்க வகையில் இருக்கின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன," என SBB 2013 இல் ஒரு வலைப்பதிவில் கூறியுள்ளது.
(Image: www.thelocal.ch)