முடிவிற்கு வருகிறது திருமணமான தம்பதியர்களுக்கான 'சமமற்ற' வரிவிதிப்பு..!

திருமணமாகாமல் இணைந்து வாழும் ஜோடிகளுடன் ஒப்பிட்டு திருமணமான தம்பதிகளுக்கான வரிவிதிப்பு சட்டங்களை சரிசெய்யும் வகையில் சுவிட்சர்லாந்தின் வரிச் சட்டங்களை திருத்த விரும்புகிறது பெடரல் கவுன்சில். இதற்கான பரிந்துரை பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட உள்ளது.
கடந்த புதனன்று, திருமணமான ஜோடிகளை பாதிக்கும் நீண்ட கால ஏற்ற இறக்க வரியை முடிவுக்கு கொண்டுவரும் திட்டத்தை பெடரல் கவுன்சில் வெளிப்படுத்தியது.
அரசாங்கத்தின் இந்த திட்டத்தின் கீழ், திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் இணைந்து எவ்வளவு கடன்பட்டிருக்கிறார்கள் என்பதை வரித்துறையினர் முதலில் கணக்கிட வேண்டும். பின்னர் இரண்டாவது முறை மீண்டும் கணக்கிட வேண்டும், ஆனால் இந்த முறை, திருமணமாகாமல் இணைந்து வாழும் ஒரு ஜோடி மீது தனித்தனியே விதிக்கப்பட்ட வரியின் அடிப்படையில் கணக்கீடு இருக்க வேண்டும். திருமணமான தம்பதி, இந்த இரண்டு வரி மதிப்பீடுகளில் குறைந்ததாக இருக்கும் வரியை கட்ட வேண்டும் என்று அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் இருக்கும் சுமார் 80,000 தம்பதிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். தனித்தனியே வரி விதிக்கப்பட்ட திருமணமாகாத ஜோடிகளை விட திருமணமான ஜோடிகள் பல ஆயிரம் அதிகம் வரி செலுத்தியதே அதற்கு காரணம்.
கடந்த புதனன்று, மைய-வலதுசாரி கிறிஸ்தவ ஜனநாயக கட்சி மற்றும் பழமைவாத வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும், மைய-இடதுசாரி சமூக ஜனநாயகவாதிகள் கட்சி மற்றும் பசுமைக் கட்சியால் இது விமர்சிக்கப்பட்டது, மேலும் இதனை "வரி பரிசு" எனவும், செல்வந்தர்களுக்கு மட்டுமே பயனளிக்கும் என்றும் கூட்டாட்சி வரிப்பணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளன.
(Image: www.swissinfo.ch)