Tamil Swiss News

சந்தேகத்திற்குரிய ரஷ்ய ஆயுத ஒப்பந்தம்: சுவிஸ் பாதுகாப்பு நிறுவனத்தில் ரெய்டு!

சந்தேகத்திற்குரிய ரஷ்ய ஆயுத ஒப்பந்தம்: சுவிஸ் பாதுகாப்பு நிறுவனத்தில் ரெய்டு!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பாதுகாவலர்கள் சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்குரிய ஆயுத ஒப்பந்தங்கள் பற்றிய விசாரணைகளின் ஒரு பகுதியாக, சுவிஸ் கூட்டமைப்பு வழக்கறிஞர்களால் கடந்த வியாழன் அன்று அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு நிறுவனமான RUAG இன் அலுவலகங்கள் சோதனை செய்யப்பட்டன.

RUAG கம்பெனியில் இருந்து வந்த குற்றவியல் அறிக்கையை தொடர்ந்து சுவிட்சர்லாந்தின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் (OAG) வியாழக்கிழமை காலை RUAG வளாகத்தை சோதனையிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்ததை உறுதி செய்தது. போர்க்குற்றங்கள், தவறான குற்றவியல் நிர்வாகம் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தை ஆகியவற்றின் மீதான கூட்டாட்சி நடவடிக்கை தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க துவங்கிவிட்டதாக OAG குறிப்பிட்டுள்ளது.

சுவிஸ் அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு ஒப்பந்த கம்பெனி RUAG அதிகாரிகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு தருகிறது.

Handelszeitung பத்திரிகை வியாழனன்று இந்த விஷயத்தை வெளியிட்டது. இந்த விஷயத்தில் ரஷ்ய வங்கி Julius Baer-உம், RUAG-இன் ஆயுத வியாபார நிர்வாகி ஒருவரும் சம்பந்தப்பட்டிருப்பதாக இந்த ஜெர்மானிய வணிக செய்தித்தாள் கூறியுள்ளது; Julius Baer வங்கி, பல ஆண்டுகளாக புடினின் பாதுகாவலாளர்களுக்கான தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை விநியோகிக்க இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ரகசிய நபர் மூலம் இந்த குற்றச்சாட்டுக்களை அறிந்த பின்னர், உடனடியாக விசாரணையை ஆரம்பித்துவிட்டு, OAG இடம் ஒரு குற்றவியல் புகாரையும் பதிவு செய்ததாக RUAG தெரிவித்துள்ளது.

Reuters இடம், இந்த குற்றச்சாட்டுகளை பற்றி தாம் அறிந்திருப்பதாகவும், அதற்கான விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் Julius Baer தெரிவித்துள்ளது.

(Image: www.swissinfo.ch)