பிராங்க் மதிப்பு வீழ்ச்சியால் லாபம் கண்ட சுவிஸ் மத்திய வங்கி!

சுவிஸ் தேசிய வங்கி (SNB) அந்நியச் செலாவணி சந்தையில் கடந்த ஆண்டு சுறுசுறுப்பு குறைந்து காணப்பட்டது. அப்போது பிராங்கின் மதிப்பை பலவீனப்படுத்த CHF 48.2 பில்லியன் ($ 50.8 பில்லியன்) மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை வாங்கியது. கடந்த வியாழன் அன்று, மத்திய வங்கியானது, 2017 ஆம் ஆண்டில் நாணயக் கையிருப்புகளால் பெரும் லாபம் அடைந்ததாக உறுதிப்படுத்தியது.
2017 ஆம் ஆண்டில், SNB சுவிஸ் பிராங்கின் மதிப்பு 2016 ல் CHF 67.1 பில்லியனில் இருந்து குறையாமல் இருக்க CHF 48.2 பில்லியன் வெளிநாட்டு கரன்சிகளை வாங்கியது. ஆனால் SNB இன் வெளிநாட்டு கரன்சி முதலீடுகளின் மதிப்பு CHF 94 பில்லியனில் இருந்து CHF 791 பில்லியனாக உயர்ந்து, கடந்த ஆண்டு மத்திய வங்கிக்கு லாபத்தை தந்தது.
2017 ஆம் ஆண்டின் முதல் பாதி ஐரோப்பாவில் காணப்பட்ட அரசியல் நிச்சயமற்ற தன்மை கரன்சி விகிதங்களில் ஆதிக்கம் செலுத்தியது.
பிரெஞ்சு தேர்தல்களுக்குப் பிறகு, ஜூலை மாத இறுதியில் சுவிஸ் பிரான்க் யூரோவிற்கு எதிராக பலவீனமடைந்து, 2017 இறுதிவரை தொடர்ந்தது, என SNB கூறியது. ஒரு யூரோ தற்பொழுது CHF 1.17 மதிப்புடையதாக இருக்கிறது, இதுவே ஒருவருடத்திற்கு முன்பு ஒப்பிடுகையில் CHF 1.07 ஆக இருந்தது. செப்டம்பர் மாதம் முதல், அமெரிக்க டாலருக்கு எதிரான பிராங்க் மதிப்பு பலவீனமடைந்தது.
மத்திய வங்கி 2017 ஆம் ஆண்டில் மொத்த லாபம் CHF 54 பில்லியன் என உறுதி செய்தது (2016 ல் இது CHF 24.5 பில்லியனாக இருந்தது). இந்த லாபம் பெரும்பாலும் யூரோவிற்கு எதிரான பிராங்க் கரன்சியின் வீழ்ச்சியால் ஏற்பட்டதாகும். வெளிநாட்டு கரன்சிகளின் இருப்பு காரணமாக கிடைத்த லாபத்தின் உச்சமாக, SNB, CHF 3.1 பில்லியன் மதிப்புள்ள தங்கத்தை இருப்பு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
(Image: www.swissinfo.ch)