முன்னாள் சுவிஸ் தூதர் வடகொரியாவுடன் தீவிர பேச்சுவார்த்தை!

முன்னாள் சுவிஸ் தூதர் Franz von Däniken அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையில் நடக்கப்போகும் பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறார்.
கடந்த வாரங்களில் பெரிய அளவில் அரசியல் அபிவிருத்தி இருந்ததாக von Däniken கூறினார், ஆனால் எதிர்பார்ப்புகளை மட்டுப்படுத்தி வைக்க அவர் பரிந்துரைத்தார்.
இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-ஐ சந்திக்க ஏற்பாடு செய்யும் அழைப்பை ஏற்றுக்கொண்டார், ஆனால் சந்திப்பின் விவரங்கள் இன்னும் தெளிவாக வெளியாகவில்லை.
"வட கொரியா மற்றும் கொரிய தீபகற்பத்தில் உள்ள நிலைமை ஒரு பெரிய சவாலாகவே இருக்கும்" என்று von Däniken, Neue Zürcher Zeitung பத்திரிகையில் மேற்கோளிட்டுள்ளார்.
1950 களின் தொடக்கத்தில் இருந்தே சுவிட்சர்லாந்து சர்வதேச கண்காணிப்பாளராகவும், ஊக்கமளிப்பாளராகவும் செயல்படுவதாக அவர் கூறினார்.
இரகசிய பணி
ஜூரிச்சின் Drosos அறக்கட்டளையின் பிரதிநிதியான Von Däniken, மேற்கு நாடுகளின் முன்னாள் தூதர்களை பியோங்யாங்கில் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இருமுறை சந்தித்து பேசினார்.
அப்போது வெளியுறவுக் கொள்கைத் தலைமை பேச்சாளராகவும், வட கொரிய தலைவரான கிம் ஜாங்-இன் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்த காங் சோக் ஜூ உடன் பரந்த அளவிலான பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
1999 முதல் 2005 வரையான காலகட்டத்தில் சுவிஸ் வெளிவிவகார அமைச்சகத்தின் செயலாளராக Von Däniken இருந்தார்.
கொரிய தீபகற்பத்தின் நிலைமை பற்றி தென்கொரியா மற்றும் சீனாவின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தற்போதைய செயலாளர் Pascale Baeriswyl இம்மாத தொடக்கத்தில் தென் கொரியா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(Image: www.swissinfo.ch)