Tamil Swiss News

சுவிட்சர்லாந்தில் மிதவேக மண்டலங்கள் அதிகரித்துவிட்டதாக கூறுகிறது ஒரு அறிக்கை

சுவிட்சர்லாந்தில் மிதவேக மண்டலங்கள் அதிகரித்துவிட்டதாக கூறுகிறது ஒரு அறிக்கை

ஒரு மணி நேரத்திற்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கும் சுவிட்சர்லாந்தில் உள்ள மண்டலங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் அதிகரித்துவிட்டதாக SonntagsBlick செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

இது அதிகாரப்பூர்வ புள்ளிவிவரமாக இல்லாவிட்டலும் இந்த ஜேர்மன் மொழி பத்திரிகை பல காண்ட்டனில் இருந்து தகவல்களை சேகரித்து வழங்கியுள்ளது.

St-Gallen காண்ட்டனில், காண்ட்டனின் தலைநகரை தவிர்த்து, தற்போது 92 மிதவேக மண்டலங்கள் உள்ளன, இவற்றில் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 72 புதிதாக உருவாக்கப்பட்டவை. Fribourg காண்ட்டனில் 172 மண்டலங்கள் உள்ளன, 2007 இல் இங்கு 56 மண்டலங்கள் தான் இருந்தன.

சமீபத்திய ஆண்டுகளில் Lucerne காண்ட்டனில் 234 மண்டலங்கள் புதிதாக உருவாக்கப்பட்டதாக செய்தித்தாள் கூறுகிறது. ஆனால் Bern காண்ட்டனில் நிலைமை வேறாக உள்ளதாகத் தெரிகிறது. இது 493 மிதவேக மண்டலங்களை கொண்டுள்ளது, இதில் 2007 மற்றும் 2017 க்கு இடையில் 356 மண்டலங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டவை.

இந்த பிரச்சினை சுவிஸ்ஸில் சர்ச்சைக்குரியதாக உள்ளதாக, SonntagsBlick சுட்டிக்காட்டியுள்ளது. சுவிஸ் ஆட்டோமொபைல் கிளப் தலைவரான தாமஸ் ஹூட்டர் இந்த விஷயத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் சங்கத்தின் போக்குவரத்துப் பாதுகாப்புத் தலைவரான கிறிஸ்டின் ஸ்டெய்ன்மேன், மிதவேக மண்டலங்களின் அதிகரிப்பு "சிறந்த வாழ்க்கை தரத்திற்கான ஒரு மேம்படுத்தப்பட்ட நடவடிக்கை, குறிப்பாக தெருக்களில் பாதுகாப்பும் மற்றும் ஒத்துழைப்பும் இருக்கும்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

(Image: www.swissinfo.ch)