Tamil Swiss News

அமெரிக்க வர்த்தக மோதல்கள் சுவிஸ் பொருளாதாரத்தை மறைமுகமாக அச்சுறுத்துகின்றன!

அமெரிக்க வர்த்தக மோதல்கள் சுவிஸ் பொருளாதாரத்தை மறைமுகமாக அச்சுறுத்துகின்றன!

இத்தாலிய தேர்தல்கள் மற்றும் Brexit போன்ற பிற சர்வதேச நிகழ்வுகளுடன் இணைந்து, அமெரிக்கா சம்பந்தப்பட்ட உலகளாவிய வர்த்தக முரண்பாடுகள் சுவிஸ் பொருளாதார வளர்ச்சிக்கு மறைமுகமாக அச்சுறுத்துகின்றன. இருப்பினும், சுவிஸ் பொருளாதாரம் இந்த ஆண்டு 2.4% மற்றும் 2019 இல் 2% வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு வேலை மற்றும் நுகர்வோர் சந்தைகள், மற்றும் வெளிநாட்டு வர்த்தகங்களின் சாதகமான முன்னேற்றங்கள் நம்பிக்கைக்கு வழிவகுக்குகின்றன என பொருளாதார விவகாரங்களுக்கான சுவிஸ் செயலகம் (SECO) செவ்வாயன்று அதன் வசந்தகால கணிப்பில் தெரிவித்துள்ளது

டிசம்பர் மாதத்தில், 2018 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 2.3% ஆகவும், 2019 இல் 1.9% ஆகவும் இருக்கப்போவதாக கணித்துள்ளது.

ஆனால் வெளிப்புற நிகழ்வுகள் சுவிஸ் பொருளாதார நிலையை மோசமாக பாதிக்கலாம் என்று SECO தெரிவித்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்க உள்நாட்டு வேலைகளை பாதுகாப்பதற்காக ஸ்டீல் மற்றும் அலுமினிய ஏற்றுமதிகள் மீது சுங்க வரிகளை விதிப்பதாகக் கூறியுள்ளார்.

"சமீபத்தில் உலோக இறக்குமதிகள் மீது சுமத்தப்பட்ட சுங்க வரி சுவிஸ் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்காது என்றாலும், முக்கிய பொருளாதார மண்டலங்களுக்கு இடையேயான வர்த்தக யுத்தத்திற்கு எந்தவித அதிகரிப்பும் மிட்-டர்ம் காலத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்," என SECO கூறியது.

சுவிஸ் ஏற்றுமதியாளர்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் நிதிச் சந்தைகளில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகள் சுவிஸ் பிராங்கை மேலும் பலப்படுத்தக்கூடும் என்று சுவிஸ் தேசிய வங்கி (SNB) சமீபத்தில் தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.

"சமீபத்திய இத்தாலிய பொதுத் தேர்தலின் முடிவுகள் அங்கு ஒரு அரசு அமைவதற்கே சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது, Brexit பேச்சுவார்த்தைகளின் விதிமுறைகள் தெளிவாக இல்லை, மேலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுவிட்சர்லாந்தின் உறவு நிச்சயமற்ற நிலையில் உள்ளது" என்று SECO கூறியுள்ளது.

(Image: www.swissinfo.ch)