Tamil Swiss News

பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட டெஸ்லா ரோந்து கார்கள் வாங்க பாசெல் போலீஸ் முடிவு!

பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட டெஸ்லா ரோந்து கார்கள் வாங்க பாசெல் போலீஸ் முடிவு!

ஏழு புதிய மின்சார டெஸ்லா மாடல் எக்ஸ் -100 டி கார்களை ரோந்து பணிக்காக வாங்கவிருக்கிறது பாசெல்-ஸ்டேடட் போலீஸ். இவற்றின் மொத்த விலை ஒரு பில்லியன் ஃப்ராங்க்களுக்கு சற்று குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டமிட்ட கொள்முதல் பற்றி செய்தி ஊடகத்தில் அறிவித்த போது, இந்தக் கார்கள் மேம்பட்ட ஹேண்டிலிங், தாராளமான சேமிப்பிடம் மற்றும் பேலோடு திறன் ஆகியவற்றை கொண்டுள்ளன என்பதை சோதனைகள் உறுதி செய்கின்றன என போலீஸார் தெரிவித்தனர்.

ரோந்து கார்கள் பொதுவாக ஒரு நாளைக்கு 200 கி.மீ. தூரம் வரை செல்லும், ஆனால் இந்த மின்சாரக் கார்கள் ஒருமுறை சார்ஜ் செய்யப்பட்டால் 500 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் திறன் படைத்தவை.

டெஸ்லா கார்களை பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ரீதியாக இந்த நகரம் முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய டீசல் வாகனங்கள் ஒவ்வொன்றும் 90,700 ஃப்ராங்க்குகள் விலையுள்ள நிலையில் புதிய டெஸ்லா கார்கள் ஒவ்வொன்றும் 140,000 பிராங்குகள் விலையுடையவை. குறைவான பராமரிப்பு செலவுகள், டெஸ்லாக்களுக்கான அதிக மறுவிற்பனை மதிப்பு ஆகியவை அதன் ஆரம்ப விற்பனை விலையை அதிகப்படுத்துகின்றன.

டச் பாதுகாப்பு நிறுவனமான ஃபோர்ஸ் ப்ரோ மூலம் போலீஸ் பயன்பாட்டிற்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள மின்சாரக் கார்களையே பாசெல் நகர போலீஸ் படை வாங்கவிருக்கிறது என பிராந்திய நாளேடு Baselandschaftliche Zeitung தெரிவித்துள்ளது.

இந்தக் கார்கள் எதிர்கால சவால்களுக்கு போலீஸாரால் பயன்படுத்தப்படலாம் என Karafantis கூறினார்.

 முதல்கட்டமாக ஒருசில கார்கள் இந்த ஆண்டு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Image: www.thelocal.ch)