Tamil Swiss News

ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது சுவிட்சர்லாந்தின் புதிய 200-பிரான்க் நோட்டுக்கள்

ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது சுவிட்சர்லாந்தின் புதிய 200-பிரான்க் நோட்டுக்கள்

சுவிஸ் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் ஒரு வடிவமைப்புடன் ஹை-டெக் கரன்சி நோட்டுக்கள் ஆகஸ்ட் 15 ம் தேதி வெளியிடப்படும் என்றும், அதற்கு ஒரு வாரம் கழித்து புழக்கத்திற்கு வரும் என்றும் சுவிஸ் தேசிய வங்கி (SNB) கடந்த திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இறுதி வடிவமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் நிலையில் இந்த புதிய நோட்டுக்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் படிப்படியாக வெளியிடப்பட்ட ஸ்டைலான புதிய 10-பிரான்க், 20-பிரான்க் மற்றும் 50 பிராங்க் நோட்டுக்களுடன் இணையவுள்ளது.

புதிய state-of-the-art தொடரில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த நோட்டு, ஒரு கை மற்றும் உலகம் உட்பட பல்வேறு கிராஃபிக் உறுப்புகள் கொண்டு விளக்கும் வகையில் சுவிட்சர்லாந்தின் பண்பினை வெளிப்படுத்துகிறது.

200-பிராங்க் நோட்டு, சுவிட்சர்லாந்தின் தொழில்நுட்ப பக்கத்தை விளக்கிக் காட்டும்.

புதிய 1,000-பிரான்க் மற்றும் 100-பிரான்க் நோட்டுக்கள் 2019 ல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்று SNB கடந்த ஆண்டு இறுதியில் கூறியது.

புதிய சுவிஸ் நோட்டுக்கள் மைக்ரோஸ்கோப் அல்லது UV ஒளி மூலம் மட்டுமே காணக்கூடிய வடிவமைப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் "state-of-the-art கள்ளநோட்டு தடுப்பு" தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது.

1995 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட எட்டாவது தொடரின் பழைய நோட்டுக்கள், அறிவிப்பு வரும் வரை சட்டரீதியாக செல்லுபடியாகும்.

(Image: www.thelocal.ch)