சுகாதார காப்பீட்டு தள்ளுபடிகளை குறைக்கும் திட்டத்தை நிராகரித்தது சுவிஸ் பாராளுமன்றம்

சுவிட்சர்லாந்தில் கட்டாய சுகாதார காப்பீட்டு முறை உள்ளது. குடிமக்கள் தங்களுக்கான காப்பீட்டாளரைத் தேர்வு செய்து பணம் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யாதவர்களுக்கு அரசே ஒரு காப்பீட்டாளரை தேர்வு செய்து, சேர்த்துவிட்டு, அதற்கான பில்லை அனுப்பிவிடுவர்.
ஷாப்பிங் செய்வதை தவிர, அதிகப்படியான தொகை கிடைக்கும் ஒரு பாலிசியை தேர்ந்தெடுப்பது, உங்கள் பிரீமியத்தை குறைக்கும் சில வழிகளில் ஒன்றாகும்.
சுவிட்சர்லாந்தில் உள்ள பெரும்பாலான காப்பீட்டைப் போலவே, அரசாங்கம் இதில் அதிகபட்ச பிரீமியம் தள்ளுபடி மற்றும் மிகுதி தொகை அளவு ஆகியவற்றை உள்ளடக்கிய பல விதிகளை அமைத்துள்ளது.
சுவிஸ் சுகாதார அமைச்சர் Alain Berset, சுகாதார அமைப்புகளை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்கும் நோக்கில், மிக அதிகமான மிகுதி அல்லது கழித்தல் தொகையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு பிரீமியம் தள்ளுபடிகளை குறைப்பதற்கான ஒரு திட்டத்துடன் வந்தார்.
கடந்த வாரம் இவரது திட்டம் பாராளுமன்றத்தால் (118 க்கு 54 வாக்குகள்) நிராகரிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்து நாட்டின் மாநிலங்கள் அவை மற்றும் மேல் சபையிலும் இந்தத் திட்டம் நிராகரிக்கப்பட்டது.
சுகாதாரத் துறை செலவினங்களைக் குறைக்க உதவுபவர்களுக்கு இது தண்டனையை வழங்கச்செய்யும் என்பதே இந்த திட்டம் மீதான பிரதான விமர்சனமாகும். உங்கள் மருத்துவ பில்களின் முதல் 2,500 பிராங்கிற்கு நீங்கள் உங்கள் சொந்தப் பணத்தில் இருந்து தான் செலுத்த வேண்டும் என்பதை அறிந்திருப்பது உங்கள் ஆரோக்கியத்தை கவனிப்பதற்கு நல்ல ஊக்கமளிக்கும். ஆனாலும் சிலர், இது டாக்டர்களிடம் மக்கள் செல்வதைத் தடுக்கிறது என வாதாடுகின்றனர்.
இந்த மாற்றங்கள் இல்லாமல், காப்பீட்டாளர்கள் தொடர்ந்து 1,500, 2,000 மற்றும் 2,500 பிராங்க்களின் மூன்று மிகக் குறைவான கழித்தல் தொகையுடன் 70% தள்ளுபடியை வழங்க அனுமதிக்கப்படுவார்கள். பெர்செட் திட்டத்தின் கீழ் அதிகபட்ச தள்ளுபடிகள் முறையே 60%, 55% மற்றும் 50% ஆக குறைக்கப்பட்டிருக்கும்.
(Image: lenews.ch)