சுவிஸ் பனிச்சரிவு: இரண்டாவது உடல் மீட்கப்பட்டது

சுவிட்சர்லாந்தின் Vallon d'Arbi பகுதியில் உள்ள ski செய்யும் இடத்தில் கடந்த சனிக்கிழமை அன்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 பேர் இறந்ததாகக் கருதப்படுகிறது. இதில் இருவரது உடல்கள் ஆறு மீட்டர் ஆழத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணியாளர்கள் பனிச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள மீதமுள்ள இரண்டு நபர்களை தேடிவருகின்றனர். ஆனால் அந்த நடவடிக்கை இரவு நேரம் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது, என Valais காண்ட்டன் போலீஸார் கூறினர்.
இறந்தவர்களில் இருவருமே 20 மற்றும் 25 வயதிற்குட்பட்ட பிரஞ்சு நாட்டுக்காரர்கள் என போலீஸார் தெரிவித்தனர்.
"உடல்கள் சில ஆறு மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது", எனவும் கூறப்படுகிறது.
32 வயது பிரெஞ்சு குடிமகன் ஒருவரும், 57 வயது சுவிஸ் நாட்டுக்காரர் ஒருவரும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
சனிக்கிழமை அதிகாலை 3:30 மணி வரை மீட்புப் பணியாளர்கள் பணிபுரிந்தனர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கடினமான பனிச்சூழலில் இனியும் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஒரு Valais போலீஸ் செய்தித்தொடர்பாளர் RTS இடம் கூறியுள்ளார்.
RTS படி, பனிச்சரிவு 2,200 மீட்டர் உயரத்தில் நடந்தது.
Vallon d'Arbi திறமையான skiers க்கு மிகவும் பொருத்தமான ஒரு பாதை, இது பாதுகாப்பு காரணங்களுக்காக அவ்வப்போது மூடப்படும். வெள்ளிக்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டபோது அந்த பாதை திறந்திருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் சுவிஸ் ஆல்ப்ஸ் பகுதியில் பனிச்சரிவு காரணமாக மூன்று பேர் கொல்லப்பட்ட நிலையில், இந்த பருவத்தில் சுவிஸ் நாட்டில் உள்ள skiers-களை இத்தகைய தொடர் மரண சம்பவங்கள் பெரிதும் பாதிக்கின்றன.
(Image: www.thelocal.ch)