ஜிகாத்களின் ஆட்சேர்ப்பு மையங்கள் ஆகிறதா ஜூரிச் மற்றும் ஜெனீவா..?

ஜெனீவாவில் ஜிகாத்திற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை பெட்டிட்-சாகோனெக்ஸ் மசூதியை மையமாகக் கொண்டு நடந்து வருகிறது. இதற்கு இரண்டு டாக்ஸி டிரைவர்கள் உதவுவதாகவும், லீ மேட்டின் டிமன்ஷே பத்திரிகையின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஜிகாத்திற்கான ஆட்சேர்ப்பில் ஜூரிச் காண்ட்டனுக்கு அடுத்து ஜெனீவா இரண்டாவது இடத்தில் உள்ளது. சிரியா அல்லது ஈராக்கில் இருக்கும் இஸ்லாமிய அரசு (IS) என்று அழைக்கப்படும் இயக்கத்தில் இணைய 86 பேர் சுவிட்சர்லாந்தில் இருந்து சென்றுள்ளதாக செய்தித்தாள் அறிக்கைகள் கூறுகின்றன. இவர்களில் ஜூரிச் காண்ட்டனில் இருந்து 12 பேர், வின்டர்தூரில் இருந்து 12 பேர் மற்றும் ஜெனீவா காண்ட்டனில் இருந்து 15 பேர் என்று அறியப்படுகிறது.
இந்த புள்ளிவிவரங்கள் பெற்றோருடன் சிரியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைகளை உள்ளடக்கியதாக இல்லை என்று செய்தித்தாள் கூறுகிறது. ஜெனீவாவில் ஒரு அதிர்ச்சி சம்பவமாக, ஒரு தாய் தனது 4 மற்றும் 10 வயது சிறுவர்களைக் சிரியாவிற்கு கடத்தி அழைத்துச் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லீ மேட்டின் டிமன்ஷே, இந்தப் புள்ளிவிவரங்கள் பெடரல் உளவுத்துறை சேவை (FIS) புள்ளிவிவரங்களில் இருந்து வேறுபடுவதாகக் கூறுகின்றன, ஏனெனில் அவற்றில் IS உடன் சேர்ந்து போராட முயற்சித்து தோல்வியடைந்த மக்கள் எண்ணிக்கையும் அடங்கும். பிப்ரவரி இறுதியில், FIS, சிரியா மற்றும் ஈராக் போரில் 79 சுவிஸ் மக்கள் ஈடுபட்டதாகப் பதிவு செய்துள்ளது. அவற்களில் பதிமூன்று பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர், 21 பேர் இறந்தனர்.
சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்சில் குறைந்த பட்சம் 9 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
(Image: www.swissinfo.ch)