Tamil Swiss News

சைக்கிள் பாதைகள் மேம்படுத்தப்படுகின்றன..!

சைக்கிள் பாதைகள் மேம்படுத்தப்படுகின்றன..!

சுவிட்சர்லாந்தில் சைக்கிள் பாதைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள், சைக்கிள் பயனர்களுக்கான முன்னேற்றங்களைக் கோரும் மக்கள் முன்முயற்சியை திருப்திபடுத்தியுள்ளன.

ஒரு வருடத்திற்கு முன்னர் 105,000 கையெழுத்துக்கள் கொண்ட இந்த மனு கூட்டாட்சி சான்சல்லரியிடம் ஒப்படைக்கப்பட்டது. தேசிய சைக்கிள் பாதை நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதுடன், கூடுதலாக, ஒரு மணிநேரத்திற்கு 30 கிலோ மீட்டர் என வேக கட்டுப்பாடுகள் கொண்ட மண்டலங்கள், வேகமான மற்றும் மெதுவான பாதை அமைப்பு, குறைவான போக்குவரத்து விளக்குகள், மற்றும் நகர்ப்புற திட்டமிடலில் மோட்டார் அல்லாத இரு சக்கர வாகனங்களின் தேவை பற்றிய அதிகரித்த விழிப்புணர்வு போன்றவற்றையும் இந்த முன்முயற்சியில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த முன்முயற்சியானது இந்த விஷயத்தில் வாக்கெடுப்பை கட்டாயப்படுத்தியிருக்கும், ஆனால் சுவிஸ் அரசியலமைப்பில் சைக்கிள் பாதைகள் விஷயத்திற்கு என ஒரு இடத்தை உறுதிசெய்யும் வகையில் எதிர்-முன்மொழிவு ஒன்றை அரசாங்கம் முன்வைத்துள்ளது.

சுவிஸ் அரசியலமைப்பில் நடைபாதை மற்றும் ஹைக்கிங் பாதையிலேயே சைக்கிள் பாதையை அமைப்பதற்கான திட்டத்தை நாடாளுமன்றம் வெளிப்படுத்திய பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை இந்த முன்முயற்சி கைவிடப்பட்டது.

"பாதுகாப்பான சைக்கிள் பாதை நெட்வொர்க் சைக்கிள் செய்வதை மிகவும் கவர்ச்சிகரமானதாக்குகிறது - இன்னும் அதிகமான மக்கள் சைக்கிள்களுக்கோ அல்லது மின்-பைக்குகளுக்கோ மாறிவிடுவார்கள்," என சுவிஸ் சைக்கிளிங் சங்கத்தின் தலைவர் மற்றும் முன்முயற்சியின் துணைத் தலைவர் ஈவி ஆல்லேமான் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Image: www.swissinfo.ch