Tamil Swiss News

2017 ல் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக விளைந்த சேதத்தின் மதிப்பு CHF170 மில்லியன்..!

2017 ல் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக விளைந்த சேதத்தின் மதிப்பு CHF170 மில்லியன்..!

2017 ல் ஏற்பட்ட வெள்ளம், புயல்கள் மற்றும் நிலச்சரிவுகள் கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்டதை விட மிக அதிகமாக இருந்தது என வன, பனி மற்றும் நிலப்பரப்பு ஆராய்ச்சிக்கான (WSL) சுவிஸ் ஃபெடரல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், 1972 முதல் 2016 வரை ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு, பணவீக்கம் சரிசெய்யப்பட்ட சராசரி தொகையான CHF307 மில்லியனை ($ 322 மில்லியன்) விடக் குறைவாக உள்ளதாக, WSL அதன் வருடாந்திர மதிப்பீட்டில் கடந்த வெள்ளியன்று சுட்டிக்காட்டியது.

நிலச்சரிவுகளால் 2%, பாறைச்சரிவுகளால் 4% மற்றும் வெள்ளத்தால் 94% என சேதங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன. அதிக விளைவுகள், இடியுடன் கூடிய மழை மற்றும் பிற பெருமழைகளால் ஏற்பட்டன (சுமார் 66%), 5% தொடர் மழைகளாலும் மற்றும் மற்ற காரணங்களால் அல்லது தெரியாத காரணங்களால் சுமார் 26% ஏற்படுகின்றன.

இரண்டு சம்பவங்கள் 2017 ஆம் ஆண்டில் மிக அதிக அளவில் சேதத்தை விளைவித்தன: ஜூலை மாதத்தில் ஆர்கவ் காண்ட்டனில் உள்ள ஜோஃபிங்கென் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் கிராபூண்டென் காண்ட்டனில் உள்ள பொன்டோ என்ற தொலைதூர கிராமம் அருகில் ஏற்பட்ட பாறை பனிச்சரிவு. இந்தப் பனிச்சரிவில் சிக்கி எட்டு மலையேறும் நபர்கள் மாண்டனர். இவர்களது உடல்களை விரிவாக தேடிய போதிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது போன்ற சம்பவங்களால் சமீபத்திய ஆண்டுகளில் சராசரியாக (ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று பேர்) ஏற்படும் வருடாந்த இறப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

(Image: www.thelocal.ch)