இங்கிலாந்தின் 'நோவிச்சோக்' நரம்பு வாயு தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறது சுவிட்சர்லாந்து!

ஒரு குறிப்பிட்ட ரசாயனத்தின் முன்னெப்போதும் இல்லாத தற்போதைய பயன்பாடு பற்றி சுவிட்சர்லாந்து கவலை கொண்டுள்ளது, என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
"நோவிச்சோக்" என்று அழைக்கப்படும் நரம்பு வாயு ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக முதன் முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது உண்மை தான் என அந்தத் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். சமீப ஆண்டுகளில் சர்வதேச சட்டம் மீதான தொடர்ச்சியான மீறல்களுக்கு இந்த சம்பவம் வழிவகுத்துள்ளது என்பது தான் மிகவும் கவலைக்குரியது எனவும் அவர் தெரிவித்தார். அவரின் கருத்துப்படி, சர்வதேச விதிமுறைகளையும் விதிகளையும் மதிக்க, அமைதியும் ஸ்திரத்தன்மையும் அவசியம் என்பதை சுவிட்சர்லாந்து வலியுறுத்துகிறது.
இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் (OPCW) உதவியுடன், பிரிட்டிஷ் அதிகாரிகளின் தாக்குதலின் சூழ்நிலைகள் மீதான விசாரணையின் முக்கியத்துவத்தையும் செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தினார். வியாழக்கிழமை, பிரிட்டிஷ் வெளியுறவு செயலர் போரிஸ் ஜான்சன், இந்தப் பொருளின் ஒரு சிறிய மாதிரி OPCW க்கு அனுப்பப்படும் என்று கூறினார்.
முன்னாள் ரஷ்ய இரட்டை ஏஜென்ட் செர்ஜி ஸ்கிரிபல் மற்றும் அவரது மகள் யூலியா ஆகியோருக்கு எதிரான மார்ச் 4 அன்று நடத்தப்பட்ட இரசாயன தாக்குதல், மாஸ்கோவிற்கும் லண்டனுக்கும் இடையில் ஒரு மனஸ்தாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் சாலிஸ்பரியில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
(Image: www.swissinfo.ch)